ராஜா.....ஆமாம். ஒருவகை நோய் என்றால் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்ட பின் மற்ற நோய் உடம்பில் இல்லை. சிகிச்சை பெறும் போது அதற்கு மட்டும் மருந்து வழங்கப்படுவது என்பதாகும். நோய்க் கூறு கண்டறிந்து உறுதிப்படுத்துவது சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட மருத்துவ செலவிற்கு உயர் கட்டண வரம்பு விதிக்கப்படுகின்றது. இதை தாண்ட கூடாது. எடுத்துக்காட்டாக AMYGDALE அறுவை சிகிச்சைக்கு 2800 யுவான் கட்டணம் என்று வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை செலவு இதை தாண்டினால் கூடுதல் செலவை மருத்துவ மனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சாந்துங் மாநிலத்தின் ஜீநின் நகர நிலை மருத்துவ மனை உறுதிப்படுத்தியுள்ளது.

கலை.....இந்த கட்டணம் நடைமுறைக்கு வந்த பின் இந்த மருத்துவ மனையில் மருந்து மற்றும் சிகிச்சை செலவு சராசரியாக 33 விழுக்காடு குறைந்தது. சில நோய்க்கான செலவு மிக அதிகமாக 40 விழுக்காடு குறைந்துள்ளது.
1 2 3
|