• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-28 17:40:01    
மருத்துவ இன்னல் தீர்ப்பு முயற்சி

cri

ராஜா.....குறைந்த சிகிச்சை செலவு நோயாளிகளாலும் குடும்பத்தினர்களாலும் வரவேற்கப்படுவது இயல்பே. மருத்துவ மனையில் சிகிச்சை பெற பலர் வேறு ஊரிருந்து ஜீனின் நகருக்கு வந்தடைகின்றனர்.

கலை.....இன்றைய நிகழ்ச்சியில் மேலும் அதிகமான சாதாரன மக்களின் அனுபவத்தை பேசுகின்றோம். லியூ ஒரு சாதாரண விவசாயி. அவருடைய மகன் இருதய நோயால் அல்லல்பட்டார். பயமுறுத்தும் அறுவை சிகிச்சை செலவினால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை. ஜீனின் நகர மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்கான கட்டணம் மற்ற மருத்துவ மனையில் இருப்பதை விட 40 விழுக்காடு குறைவு என்ற தகவலை அறிந்த பின் லியூ அவருடைய மகனை சில நூறு கிலோமீட்டர் அப்பாலிருந்து இந்த ஜீனின் மருத்துவ மனைக்கு அனுப்பினார்.

இது பற்றி அவர் கூறியதாவது

ராஜா......இந்த மருத்துவ மனைவில் என் மகனின் நோய்க்கு சிகிச்சை அளிக்க பத்தாயிரம் யுவான் போதும். இதை கேட்ட பின் எனக்கு நம்பிக்கை வந்தது. வேலை செய்யும் போது சக்தி அதிகரிக்கும். ஏனென்றால் பத்தாயிரம் யுவான் சேமித்த பின் என் மகனின் நோய் தீரும் என்றார் அவர்.

கலை.....சீன சுகாதார அமைச்சகம் இப்போது ஜீனின் மருத்துவ மனையில் நடைமுறைபடுத்தபட்ட "ஒட்டு மொத்த சோதனை கட்டணம்"என்ற முறை நாடு முழுவதிலும் நீட்டிக்கப்படுகின்றது.

ராஜா.....முன்பு இந்த மருத்துவ மனையின் சோதனை அட்டையை மற்ற மருத்துவ மனையில் பயன்படுத்த முடியாது. அங்கே மீண்டும் சோதனை செய்ய வேண்டும். இதன் விளைவாக நோயாளிகளுக்கு பொருளாதார சுமை அதிகரிக்கும் அல்லவா?

கலை.....ஆமாம். இப்போது டியென் சிங், ஷாங்காய், நாங்கிங் முதலிய இடங்களில் அரசு சகாதார அமைச்சகத்தின் தலைமையில் சில மருத்துவ மனைகளுக்கிடையில் சோதனை அட்டை அங்கீகரிக்கப்படும்.

ராஜா.....சீன சுகாதார அமைச்சர் கோ சியாங் இது பற்றி விளக்கினார். சாதாரண மக்களுக்கு நன்மை தரும் பல்வகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேவேலையில் ஒட்டுமொத்த மருத்துவ சிகிச்சை முறையின் சீர்திருத்த திட்டத்தை உருவாக்கி சிகிச்சை செலவு சுமையை குறைக்க வேண்டும் என்றார் அவர்.

கலை......அவர் சொன்னது சரிதான். ஆனால் இந்த சீர்திருத்த திட்டம் நடைமுறையில் அமுலாக்கப்படுவதற்கு முன் சாதாரண மக்கள் நோய்க்காக சிகிச்சை பெறுவதில் நிலவுகின்ற இன்னல்களை தீர்ப்பதை இப்போது முக்கிய வேலையாக கருத வேண்டும். அல்லவா.


1  2  3