 சீனாவில், மருத்துவ கட்டணம் அதிகம் என்பதால், நீண்டகாலமாக, நோயால் பீடிக்கப்பட்டோர் மருத்துவ மனைகளுக்கு சென்று, சிகிச்சை பெற விரும்புவதில்லை. இப்போது, அவர்கள் சிகிச்சை பெற முடியும் என்பதை செய்தியாளர் கண்டறிந்துள்ளார். ஏனெனில், குறைந்த வருமானம் பெறுவோருக்கு மருத்துவ சேவையை வழங்கும் பொருட்டு, சீனாவின் சில இடங்களில் செலவு குறைவான மருத்துவ மனைகள் அல்லது நோயாளி அறைகள் துவக்கப்பட்டுள்ளன.
Shangdi மருத்துவ மனை, பெய்ஜிங் மாநகரின் வட பகுதியில் உள்ள Hai Dian வட்டாரத்தின் Shangdi குடியிருப்பு பகுதியில் இருக்கின்றது. மருத்துவ மனை பெரியது அல்ல. 2 திங்களுக்கு முன், இது திறந்து வைக்கப்பட்டது. ஒரு நாள் நண்பகல் செய்தியாளர் அங்கு சென்றார். சில நோயாளிகள், சிகிச்சை பெற வரிசையில் காத்திருந்தனர். குறிப்பாக, சிலர் இதர பகுதிகளிலிருந்து பேருந்தில் இங்கு வந்தனர். பெய்ஜிங்கின் தென் பகுதியில் வாழும் Zhan Qing Liang கூறியதாவது:
"இம்மருத்துவ மனையின் செல்வாக்கைக் கேள்விபட்டு, நான் இங்கு வந்தேன். இது, செலவு குறைவான மருத்துவ மனையாகும். மருத்துவ கட்டணம் குறைவு. இங்கு வந்த பின், நான் சிறப்பாக உணர்கிறேன். இங்கு சுகாதார வசதி நன்றாக இருக்கின்றது." என்றார் அவர்.
தற்போது, நாள்தோறும் சுமார் 200 பேர் Shangdi மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகின்றனர். சில சமயங்களில், 300க்கு அதிகமானோர் இங்கு வருகின்றனர். அண்மையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவ மனைக்கு, இது பெரும் சாதனையாகும். அதிகமான நோயாளிகள் இங்கு வருவதற்குக் காரணம் என்ன?
Shangdi மருத்துவ மனை, அரசாங்க நிதியைப் பெற்று, பொது மக்களுக்காக நடத்தப்படும் முதலாவது செலவு குறைவான மருத்துவ மனையாகும். இம்மருத்துவ மனை திறந்த நாளில், இங்கு சிகிச்சை பெற வந்த முதலாவது நோயாளி, 5 யுவான் மட்டுமே செலவிட்டார். இதர பெரிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற 50-60 யுவான் செலவிட வேண்டும்.
1 2 3
|