• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 30th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-29 07:59:31    
செலவு குறைவான மருத்துவ மனைகள்

cri

இம்மருத்துவ மனையின் தலைவர் Wang Ling அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது:

"Hai Dian பகுதியில் வாழும் குறைந்த வருமானம் பெறுவோருக்கும், குடிபெயரும் மக்களுக்கும் அடிப்படை மருத்துவ உத்தரவாதம் அளிப்பது எங்கள் நோக்கம். இம்மருத்துவ மனையில் பொது மக்கள் குறைந்த செலவில், தரமான அடிப்படை மருத்துவ சேவையை பெற முடியும்." என்றார் அவர்.

குறைந்த வருமானம் பெறுவோர் சிகிச்சை பெறுவதற்கு, Shangdi மருத்துவ மனை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பதிவுக் கட்டணத்தையும் சிகிச்சை கட்டணத்தையும் குறைப்பது அல்லது ரத்து செய்வது, அனைத்து மருந்துகளின் விலையை 5 விழுக்காடு குறைப்பது ஆகியவை இவற்றில் அடங்கும்.

Shangdi மருத்துவ மனையில் குறைவான மருத்துவ கட்டணத்துக்கு என்ன காரணம்? விலை அதிகமான மருந்துகளையும், மருத்துவ வசதிகளையும் தவிர்ப்பது அல்லது குறைவாக பயன்படுத்துவது, இதற்கு முக்கிய காரணமாகும்.

உண்மையில், Shangdi மருத்துவ மனையின் நிதியில் பெரும் குதியை, Hai Dian வட்டார அரசு வழங்குகிறது. இதன் காரணமாக, மருத்துவமனை மக்களுக்கு பெரும் பயனளிக்கிறது. Hai Dian வட்டார அரசின் நிதி, இம்மருத்துவ மனைக்கு ஆதரவாக உள்ளது. குறைந்த வருமானம் பெறுவோருக்கு தரமிக்க சேவையை இம்மருத்துவ மனை வழங்குவதற்கு இதுவே காரணம்.

Shangdi மருத்துவ மனை போன்ற, செலவு குறைவான மருத்துவ மனைகளை தவிர, சீனாவின் பல இடங்களில் உள்ள மருத்துவ மனைகள், குறைந்த வருமானம் பெறுவோரின் சிகிச்சை இன்னல்களைத் தீர்க்க, அவர்களுக்காக செலவு குறைவான நோயாளி அறைகளை வைத்துள்ளன.

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040