• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-29 07:59:31    
செலவு குறைவான மருத்துவ மனைகள்

cri

Shan Dong மாநிலத்தின் Ji Nan நகரில், 12 வயதான சிறுமி Xu Meng Meng எலும்பு முறிவினால், இந்நகரின் மைய மருத்துவ மனையின் நோயாளி அறையில் பத்து நாட்களுக்கும் மேல் தங்கி சிகிச்சை பெற்றார். அவரின் வயது, அவரின் குடும்பத்தின் பொருளாதார நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவர் Gao Chang Hong, அறுவை சிகிச்சைக்கு பதிலாக, ஒட்டுமொத்த மீட்பு சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சைவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இம்முறைக்கு, மேலும் உயரிய தொழில் நுட்பமும் சக்தியும் தேவை. Gao Chang Hong கூறியதாவது:

"அறுவை சிகிச்சை செய்தால், மருத்துவ மனையின் மொத்த வருமானம் அதிகரிக்கக்கூடும். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் வருமானமும் அதிகரிக்கும். ஆனால், குழந்தையின் துன்பம் அதிகரிக்கும். அவரின் எலும்பு முறிவு காலம் நீடிக்கும்." என்றார் அவர்.

இறுதியில், Xu Meng Mengயின் குடும்பத்தினர், 2 ஆயிரத்து 300 யுவான் மட்டுமே செலவிட வேண்டியிருந்தது, அவர் குணமடைந்தார். இது எதிர்பார்ப்பதை விட குறைவான கட்டணம்.

Xu Meng Mengக்கு சிகிச்சை அளித்த Ji Nan நகரின் மைய மருத்துவ மனை, கடந்த ஆண்டின் செப்டம்பர் நடுப்பகுதி முதல், குறைந்த வருமானம் பெறுவோருக்கு "வறுமை ஒழிப்பு நோயாளி அறையை" திறந்துள்ளது. விதிகளின் படி, மருத்துவ காப்பீடு மற்றும் இலவச மருத்துவச் சேவைகளைப் பெறாத பொது மக்கள், இங்கு சிகிச்சை பெறலாம். நோயாளிகள் மருத்துவ மனையில் சேர்வதற்கான மருத்துவ கட்டணம், சோதனைக் கட்டணம், சிகிச்சை கட்டணம் ஆகியவை 20 விழுக்காடு குறைந்துள்ளன.

Ji Lin மாநிலத்தின் Chang Chun நகர், 2002ஆம் ஆண்டு முதல், இந்நகரின் கீழுள்ள 10 மருத்துவ மனைகளில் சுமார் 150 "வறுமை ஒழிப்பு படுக்கைகள்" வைத்து, குறைந்த வருமானம் பெறுவோருக்கு மருத்துவ சேவையை வழங்குகிறது.

தற்போது, சீனாவின் பல்வேறு இடத்து சுகாதார மற்றும் மருத்துவ அமைப்புக்கள் பல்வகை வடிவங்களின் மூலம், பொது மக்களின் மருத்துவ கட்டணப் பிரச்சினையை உரிய முறையில் தீர்க்கின்றன. இதே போன்ற செலவு குறைவான மருத்துவ சேவை வசதிகளை மேலும் ஏற்படுத்துமாறு பல்வேறு இடத்து மருத்துவ மனைகளை சீன சுகாதார அமைச்சகம் கோரியுள்ளது.


1  2  3