
லு கு ஏரி
சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில், ஆணும் பெணும் திருமணம் செய்யாமல் காதல் உறவை மட்டும் கொள்ளும் ந சி இனத்தின் ஒரு பிரிவான மோ சொ இனத்தவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் தலைமுறை தலைமுறையாக தென் மேற்கு சீனாவின் லு கு ஏரியோரத்தில் வசித்து வருகின்றனர். இது வரையிலும் சில கிராமங்களில், பழங்குடும்ப முறை தொடர்கின்றது. அதாவது, தாய்வழி குடும்ப முறை நிலவுகிறது.
சான் சூ, சிறு வயதிலிருந்தே லு கு ஏரியோரத்தில் வாழ்ந்து வாழும் ஒரு ஆண். அழகுமிக்கவர் என்பதாலும், உள்ளூரில் அவரது குடும்ப தலைமுறை புகழ் பெற்றுள்ளது என்பதாலும், "மோ சொ அரசகுமாரர்" என அழைக்கப்படுகின்றார். உள்ளூரிலுள்ள பல பெண்களும் லு கு ஏரி இடத்தில் சுற்றுலா செய்ய வந்துள்ள பெண் பயணிகளும் அவர் மீது காதல் கொண்டனர். மூன்று திங்களுக்கு முன், 30 வயதான சான் சூ ஆயிரமாயிரம் மைல் தொலைவைப் பொருட்படுத்தாமல் பெய்சிங் வந்தார். ஏன்?

லு கு ஏரி
"நடிகராக வேண்டும் என நினைத்து பெய்சிங் வந்தேன். ஆனால், வந்த பிறகு இப்படி செய்ய முடியவில்லை. பெய்சிங்கில் அலைந்து திரிந்து, மதுவகத்தில் பாடினேன். இவ்வாறு அதிக நாட்கள் பெய்சிங்கில் தங்கியிருந்ததாகக்கூறினார்."
பெய்சிங்கிலுள்ள அடர்ந்த தேசிய இன தனிச்சிறப்பியல்புடைய மதுவகத்தில் சான் சூ ஆசைத்தீர பேசுகின்றார். பெய்சிங்கில் தங்கும் நாள் பற்றி, தனது கனவு பற்றி, சொந்த ஊர் பற்றி அவர் பேசுகின்றார். பெய்சிங் வந்து மூன்று திங்களுக்கு மேல் மட்டும் கழிந்தாலும், அவரால் நன்றாக சீன மொழியில் பேச முடிகின்றது. பெய்சிங்கில் பாடகராக அல்லது நடிகராக மிகவும் விரும்புகின்றார். இக்காரணத்தினால், சாதாரண நாட்களில் சீன மொழியில் பேச பழகுவதாகச் சொன்னார். இருப்பினும், தற்போது இவ்விரண்டு தொழில்கள் தனக்கு வசதி தரவில்லை என்றார்.
தற்போது, அவர் தற்காலிகமாக வட கிழக்கு பெய்சிங் நகரிலுள்ள "மடாமி" என்னும் மதுவகத்தில் பணிபுரிகின்றார். மோ சொ ஆடல்பாடல் தயாரிப்பில் ஈடுபட்டு, இரவில் பாடுகிறார். மதுவகத்தின் உரிமையாளர் மோ சொ பண்பாட்டின் மீது பற்று கொண்டவர். லு கு ஏரியோரத்தில் பலமுறை சுற்றுலா சென்றிருக்கின்றார். பினனர், பெய்சிங்கில் மோ சொ இன நடையுடை பாவனையுடைய இந்த மதுவகத்தை நடத்துகின்றார்.
1 2 3
|