
மோ சொ இன பெண்கள்
இம்மதுவகத்தில் பத்துக்கும் அதிகமான மோ சொ இனத்தவர்கள் இருக்கின்றனர். முக்கியமாக மோ சொ இன ஆடல் ஆடுகின்றனர். பாடுகின்றனர். உண்மையில், பெரும்பாலான மோ சொ இன மக்கள், தம் ஊரை விட்டு வெளியே போக விரும்பவில்லை என்று சான் சூ கூறினார்.
"இது வரையிலும் மோ செள இன மக்கள், தாய் வழி குடும்பத்தில் வாழ்கின்றனர். ஒரு குடும்பத்தில், குறைந்தது, 7, 8 பேர் இருக்கின்றனர். மொத்தத்தில் 20, 30 பேர் இருக்கின்றனர். இக்குடும்பத்தின் பல காரியங்களை அனைவரும் நிறைவேற்றுவர். ஆகையால், நெருக்குதல் இல்லை. அனைவரும் சுமுகமாக ஒன்றுபட்டு வாழ்கின்றனர்." என்றார்.
பெய்சிங் வருவதற்கு முன், லு கு ஏரியோரத்தில் சான் சூ வசதியாக வாழ்ந்தார். ஆடல் நுட்பத்தைக் கற்றுக்கொண்ட அவர், உள்ளூரில் மோ சொ இன ஆடல்பாடல் அணி ஒன்றை அமைத்தார். தவிரவும், தம் ஊரில், மோ சொ இன மக்கள் வசிக்கும் பாரம்பரிய மர வீடுகள் பலவற்றை அவரது குடும்பம் கட்டியது. இத்தகைய வீடுகளின் சுவர்கள் அனைத்தும் மரத்தால் ஆனவை. மரத்துண்டுகளைக் கொண்டு வீட்டு கூரை உருவாக்கப்பட்டது. பயணிகள் இவற்றில் வசித்து, மோ சொ இன மக்களின் குடும்ப சூழ்நிலையை நேரில் உணர்ந்து கொள்ளலாம். சில திரைப்பட ஆசிரியர்கள் லு கு ஏரியோரத்துக்கு வந்து மோ சொ இன மக்கள் பற்றிய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் படம்பிடிக்கும் போது, அவர்கள் சான் சூ மீது கவனம் செலுத்தினர். இவற்றில் சான் சூ நடித்தார். இரண்டு திரைப்படங்களில் நடித்த பின்னர், பாடவும் நடிக்கவும் உள்ள தமது திறமையில் சான் சூ மேலும் நம்பிக்கை கொண்டார். தனது வளர்ச்சிக்கான வாய்ப்பினை தேடி, அவர் கலைத் துறை வளர்ச்சியடைந்துள்ள பெய்சிங் வந்திருக்கின்றார்.
1 2 3
|