• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-31 14:44:23    
பெய்சிங்கில் மோ சொ இன யுவர் சான் சூ

cri

மோ சொ இன இளைஞர்கள்

பெய்சிங் நகரம் இவ்வளவு பெரியது. இவ்வளவு அதிகமான கலைஞர்கள் இருக்கின்றனர். இங்கு பாடகராவது சுலபமல்ல. நடிகராவதும் கடினம் என்று சான் சூ புரிந்து கொண்டார். பல்வேறு தரப்புகளுடன் தொடர்பு கொண்டு அரங்கேற்றத்துக்கான வாய்ப்பினைத் தேடினாலும், பயன்தரவில்லை.

பெய்சிங்கில் தங்கும் சான் சூ, சில நண்பர்களுடன் நெருங்கி பழகினார். இந்நண்பர்களில் வா இன பாடகர் Ai Mang, சான் சூ மீது பெரும் தாக்கம் பிடிக்கின்றார். அவர் பெய்சிங்கில் பத்து ஆண்டுகள் தங்கியிருக்கின்றார். நகரத்தில் தேசிய இனப்பாடல்களைப் பரவலாக்க முயற்சித்து வருகின்றார். தற்போது, அவர் பாடல் இயற்றுகிறார். இசை அமைக்கின்றார். அவர் பாடும் பாடல்கள், பொது மக்களிடையே பெரிதும் வரவேற்கப்படுகின்றன. தற்போது பெய்சிங்கில் வளர்ச்சியுறுவதில் சான் சூவுக்கு மேம்பாடு இல்லை என்று அவர் மனம் திறந்து கூறினார்.

"எது உண்மையான மதிப்புள்ள பொருள், ஏன் இது வரையிலும் மோ சொ இனத்தவர் திருமணம் செய்யாமல் ஆண் பெண் தத்தமது வீட்டில் வசிக்கின்றனர் போன்ற மோ சொ இன பண்பாட்டை, சான் சூ புரிந்து கொள்ளவில்லை. பாட விரும்பினால், மோ சொ இன மக்களின் பண்டைய நாட்டுப்புறப்பாடல்களை தெளிவாக்க வேண்டும் எனவும், சொந்த தேசிய இனத்தின் பண்பாட்டு கண்ணோட்டத்தை நன்கு ஆராய வேண்டும்" எனவும் சான் சூவிடம் கூறியதாக Ai Mang சொன்னார்.

சான் ஸிவ் பெய்சிங்கில் மூன்று திங்கள் தங்கிவிட்டு, ஊர் திரும்பத்திட்டமிட்டார். பெய்சிங்கில் தங்கிய குறுகிய காலத்தில், பாடகராகவும் நடிகராகவும் மாறும் தனது கனவு நிறைவேறவில்லை. இருந்த போதிலும், தனது குறைகளை தெரிந்து கொண்டதாக அவர் சொன்னார். லு கு ஏரியோரத்துக்குத் திரும்பிய பின்னர், மற்றவர்களுடன் சேர்ந்து இணைய தளம் ஒன்றை நிறுவி, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மோ சொ இனத்தவர்களின் கடந்த காலத்தையும் இக்காலத்தையும் அறிமுகப்படுத்தி, இணைய தளத்தின் மூலம், மோ சொ இனத்தவர்களைப் பற்றி மேலும் அதிகமான மக்கள் அறிந்து கொள்ளச் செய்திட திட்டமிட்டதாக சான் சூ தெரிவித்தார்.


1  2  3