
சீனாவின் தோல்பாவைக் கூத்து பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தக் கூத்தை நடத்துவோர் பற்றி உங்களுக்குத் தெரியுமா? வட சீனாவின் Hebei மாநிலத்தின் தாங் சான் நகரில், தோல்பாவைக் கூத்து நடத்தும் மூதாட்டிகளின் அணி இருக்கின்றது. இம்மூதாட்டிகளில், கூடுதலான வயதுடைய கௌ லன் அம்மையாருக்கு வயது 74. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, தோல்பாவைக் கூத்து கௌ லன் அம்மையார் உள்ளிட்ட பல மூதாட்டிகளின் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பகுதியாக மாறியுள்ளது.
தோல்பாவைக் கூத்தை, ஆட்டுவிப்பவரின் திறமை தோல்பாவைக் கூத்தின் தனிச்சிறப்பை வெளிப்படுத்துகின்றது. இவ்வாண்டு வசந்த விழாவை முன்னிட்டு, சீன மத்திய தொலைக்காட்சி நிலையம் நடத்திய இரவு கலை விழாவில், "Qiao Xi Yang" என்னும் தோற்பாவைக் கூத்தின் துள்ளும் இசை ஒலி, இக்கலை விழாவுக்கு கோலாகலமான விழாச் சூழலை வழங்கியது. கூத்து நிகழ்ச்சி உள்ளம் உருக்குவதாக இருந்தது. பெய்ஜிங் பெண் Zhao Xiao Le பார்வையாளர்களில் ஒருவர்.
"Qiao Xi Yang என்னும் கூத்து மக்களுக்கு ஆர்வம் தருகின்றது. தோல்பாவைக் கூத்தை நான் முதன்முறையாக பார்த்தேன். இந்த மூதாட்டிகளின் திறமை பாராட்டத்தக்கது. அவர்களுக்கு வயது கூடுதலாக இருந்த போதிலும், அவர்கள் மிக நன்றாக பாவைகளை இயக்குகின்றனர்.
1 2 3
|