
இந்த நிகழ்ச்சியினால், தங்களது குறையை அவர்கள் புரிந்து கொண்டனர். தொழில் முறை ஆசிரியர் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கருதினார். இந்த ஆடல் குழுவைச் சேர்ந்தவர் ஒருவர், உள்ளூரில் புகழ்பெற்ற தோற்பாவை கூத்து ஆசிரியர் பென் ஜின் சையிடம் கற்றவர். எனவே, Qiao Xi Yang ஆடல் குழு திரு பென்னை சென்று பார்த்தது. ஆனால், இது திரு பென்னுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியது.
"தோற்பாவை கூத்து நடத்தி 11 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த கிழவிகளை பார்க்கும் போது, நடனப் பெண்களைப் போல் தோன்றவில்லை, எனது படைப்புகள் கெடுக்கப்படுமோ என்று அஞ்சினேன். ஆகவே, நாம் வெவ்வேறு இடங்களில் இருக்கிறோம். எனக்கு வேலை முடிந்து, சாப்பிட வேண்டும் என்று சொன்ன போது, அவர்கள், உங்களுக்கு நாங்கள் விருந்தளிப்போம் என்று சொன்னார்கள். இந்த மனஉறுதி என் மனதை உருகியது" என்றார் திரு பென்.

இறுதியில், பென் ஜின் சை இந்த மூட்டாடிகளை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து நடந்த பயிற்சி அவரின் மனதை மாற்றியது. கூத்தின் கடின அசைவுகளை ஆசிரியர் பென் குறைத்த போதிலும், நாள்தோறும் பயிற்சி செய்வது இந்த வயதான மாணவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர்களில் மிக வயதான கௌ லன், மேலும் அதிகமான சோதனைகளைச் சமாளித்தார். உடல் நிலை தவிர, அப்போது மிகக் குறைவாக காணப்பட்ட தோற்பாவை கூத்தை திறம்பட ஆடுவதற்காக, அவர் பெரும் முயற்சி மேற்கொண்டார்.
ஆடலின் போது, கௌ லன் உள்ளிட்ட முதியோர்களின் முகங்களில் தென்பட்ட மகிழ்ச்சி மக்களை மிகவும் ஈர்க்கிறது என்பதை செய்தியாளர் கண்டறிந்தார். கௌ லன் கூறியதாவது:
"நான் முழு மனதுடன் ஆடி, தற்போது எனது வாழ்க்கை நிலைமையையும் மன எழுச்சியையும் பிரதிபலிக்கின்றேன். நான் மகிழ்ச்சியுடன வாழ்கின்றேன். எனது வாழ்க்கை அவ்வளவு அழகானது என்பதை நீங்களே பாருங்கள் என்று ஆடலின் போது நான் உணர்கின்றேன்" என்றார் அவர். 1 2 3
|