• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-05 14:08:58    
தோல்பாவைக் கூத்து நடத்தும் மூதாட்டிகள்

cri

"Qiao Xi Yang" என்னும் கூத்தை நடத்தும் 12 மூதாட்டிகளில், கூடுதலான வயதுடைய கௌ லன் அம்மையாருக்கு வயது 74. அரங்கேறி கூத்து நடத்தும் விருப்பம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

"உடற்பயிற்சி செய்வது முதலாவது நோக்கம். ஓய்வு பெற்ற பின், தனிமை உணர்விலிருந்து விடுபடுவது மற்றொரு நோக்கம்." என்றார் அவர்.

ஓய்வு பெற்ற பின், கௌ லன் அம்மையாரின் வாழ்க்கை தாழ்வாக இருந்தது. பின்னர், முதியோருக்கான ஒரு பல்கலைக்கழகத்தை Tang Shan நகர் துவக்கியது. ஆடல் கலையை விரும்பும் கௌ லன் இதில் சேர பதிவு செய்தார். தாம் கற்றுத் தேறும் ஆடல் கலையை இதர மூதாட்டிகளுக்கு கற்பிப்பது அவரின் எண்ணம். அவர் கூறியதாவது:

"நாள்தோறும் ஆடல் வகுப்பில் நான் முதலில் கல்வி பயில்கின்றேன். பின்னர் காலைப் பயிற்சி இடத்தில், அந்த ஆடலை இதர மூதாட்டிகளுக்கு கற்பிக்கின்றேன். அவர்களுடன் சேர்ந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அவர்களுக்கு கற்பிக்க நான் விரும்புகின்றேன். சிறு வயதிலிருந்தே எனக்கு இந்த விருப்பம் இருந்தது." என்றார் அவர்.

படிப்படியாக, ஒவ்வொரு நாள் காலையிலும், கௌ லன்னுடன் சேர்ந்து ஆடலை பயிலும் மக்கள் அதிகரித்து வந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன், கௌ லன் தமது நண்பர்களுடன் சேர்ந்து Qiao Xi Yang ஆடல் குழுவை உருவாக்கினார். இந்த ஆடல் குழு உருவாக்கப்பட்ட முதல் ஆண்டில், அவர்கள் நடித்த நிகழ்ச்சி, நாடு தழுவிய முதியோர் ஆடல் போட்டியில் பரிசு பெற்றது. இந்த பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்து, அவர்களின் உற்சாகத்தை தூண்டியது. அதன் பின்னர், அரங்கில் நடிப்பது அவர்களின் மிகப் பெரிய விருப்பமாக மாறிவிட்டது.

இறுதியில் வாய்ப்பு வந்தது. 1997ஆம் ஆண்டில் தாங் சான் நகரில் முதியோர் கலை குழு நிறுவப்படும் என்பதை அறிந்து கொண்டதும், Qiao Xi Yang ஆடல் குழு பதிவு செய்தது. ஆனால் உடல் உயரம், வயது, தொழில் முறை ஆகிய விதிகளுக்குப் பெருந்தாததால், இந்த ஆடல் குழு தெரிவு செய்யப்படவில்லை.

1  2  3