• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-12 15:53:10    
மேற்கத்திய பாணி கேக் கடையின் தென் கொரிய மேலாளர்

cri

அண்மையில், பெய்ஜிங் மாநகரின் கிழக்கு பகுதியில் உள்ள பரபரப்பான வணிகப் பகுதியில் "பாரிஸ் Baguette" என்னும் பிரெஞ்சு-பாணி கேக் கடை திறக்கப்பட்டது.

இந்த மேற்கத்திய பாணி கேக் கடையை, தென் கொரியாவில் உள்ள மிக பெரிய உணவு நிறுவனமான SPC நிறுவனம் பெய்ஜிங்கில் திறந்துள்ளது. பெய்ஜிங் கிளையின் மேலாளர் Jay Mun, தென் கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்தவர்.

அவர் சீனாவுக்கு வந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தைப் பருவத்தில் இருந்தே, தாம் சீனாவை நேசிப்பதாகவும், சீனாவுக்கு வந்து பணி புரிவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார்.

"சிறு வயதிலிருந்தே, சீனாவின் நாவல்களைப் படிக்கவும், சீனத்திரைப்படங்களை பார்க்கவும் நான் விரும்பினேன். படிப்படியாக சீனாவை நான் நேசிக்கத் தொடங்கினேன். பல்கலைக்கழகத்தின் சீன மொழித் துறையில் நான் சேர்ந்து படித்து, பட்டம் பெற்ற பின், சீனாவுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட விரும்பினேன்." என்றார் அவர்.

தவிர, தாம் சீனாவுடன் நெருக்கமாக தொடர்பு கொள்ள தமது அக்காவே காரணம் என்றும் திரு Jay Mun கூறினார். சிறு வயதில், "இளம் நடன இசை" எனும் சீன நாட்டுப்புறப்பாடலை அவருக்கு அக்கா கற்றுக்கொடுத்தார். இந்தப் பாடலினால், பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் கூட்டாளிகளின் பாராட்டை அவர் பெற்றார். இது அவருக்கு தன்னம்பிக்கை தந்தது என்று அவர் கூறினார். இது நாள் வரையும், அவர் இந்த பாடலை மறக்காமல் நினைவில் வைத்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின், SPC நிறுவனம், வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தில் சீனாவைச் சேர்க்கும் என்று Jay Mun அறிந்து கொண்டார். இதனால், இந்நிறுவனத்தில் வேலை செய்ய அவர் தீர்மானித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன், ஷாங்காய் மாநகரில் கிளையை இந்நிறுவனம் திறந்தது. இது, சீனாவில் உள்ள முதலாவது கிளையாகும். இக்கிளையின் துணைத் தலைமை மேலாளராக Jay Mun பதவி ஏற்றார்.

1  2  3