• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-12 15:53:10    
மேற்கத்திய பாணி கேக் கடையின் தென் கொரிய மேலாளர்

cri

"மேலாளர், எங்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்துகின்றார். இங்கு நாங்கள் மகிழ்ச்சியாக வேலை செய்து, சுமுகமாக சகவாழ்வு நடத்துகின்றோம்." என்றார் அவர்.

இக்கடையைத் தவிர, இவ்வாண்டு பெய்ஜிங்கில் மற்றொரு கடையை பாரிஸ் Baguette திறந்தது. திரு Jay Mun அக்கடையை நிர்வகிக்கின்றார். அக்கடையின் பணியாளர்களுடனும் அவர் சுமுகமாக பழகுகிறார் என்று Wang Yao Xin செய்தியாளரிடம் தெரிவித்தார்.

திரு Jay Mun, அவரின் மனைவி, அவர்களின் இரண்டு வயதான மகன் ஆகியோர், கிழக்கு பெய்ஜிங்கில் உள்ள Wang Jing பகுதியில் வாழ்கின்றனர். இங்கு கொரிய நாட்டவர் அதிகமாக வாழ்கின்றனர். தனது நாட்டவர்களை Jay Munஉம் அவரின் குடும்பத்தினர்களும் அடிக்கடி சந்திக்கின்றனர். அருகில் தென் கொரிய உணவகங்கள் அதிகம். இவற்றின் காரணமாக, பெய்ஜிங்கில் Jay Munஉம் அவரின் குடும்பத்தினர்களும் வீட்டில் இருப்பது போல உணர்கின்றனர். பல சீன நண்பர்களுடன் அவர் பழகுகிறார். அவரின் சீன மொழியின் தரமும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.

பெய்ஜிங்கில் நீண்டகாலம் வாழ விரும்புவதாக சீன மொழியில் அவர் செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறியதாவது:

"இனி, பெய்ஜிங்கில் நீண்டகாலத்திற்கு வசிக்க நான் திட்டமிடுகின்றேன். சீனாவை மேலும் அறிந்து கொண்டு, மேலும் அதிகமான நண்பர்களுடன் பழகி, உண்மையான பெய்ஜிங் நகரவாசியாக மாற விரும்புகின்றேன். பாரிஸ் Baguetteஐ, பெய்ஜிங் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் மேற்கத்திய பாணி கேக் தொழில் சின்னமாக மாற்ற என்னால் இயன்றதனைத்தையும் செய்ய நான் விரும்புகின்றேன்." என்றார் அவர்.

இவ்வாண்டு பெய்ஜிங்கில் மேலும் 6 கடைகளைத் திறப்பதற்கும், எதிர்காலத்தில் சீனாவில் உள்ள பல நகர்களில் கிளைகளை திறப்பதற்கும் தமது நிறுவனம் தயார் செய்கின்றது என்று Jay Mun செய்தியாளரிடம் கூறினார்.


1  2  3