• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-12 15:53:10    
மேற்கத்திய பாணி கேக் கடையின் தென் கொரிய மேலாளர்

cri

ஷாங்காய் மாநகரில் உள்ள SPC நிறுவனத்தின் கிளையில் விற்பனையாகும் மேற்கத்திய பாணி கேக், அசலான, பிரெஞ்சு நறுமணம் கொண்டுள்ளதால், மேற்கத்திய பாணி கேக்கை விரும்பும் ஷாங்காய் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இக்கிளை திறந்து விடப்பட்ட இதே ஆண்டில், மொத்தம் 8 கடைகள் திறந்து விடப்பட்டன. இதற்கு பின், பெய்ஜிங் மாநகர் மீது SPC கூட்டு நிறுவனம் கவனம் செலுத்தியது. இவ்வாண்டின் ஜனவரி திங்கள் நடுப்பகுதியில், பெய்ஜிங் மாநகரில் உள்ள கிளை திறக்கப்பட்டது. பெய்ஜிங்கில் Jay Munயின் வாழ்க்கை துவங்கியது.

பெய்ஜிங்கின் கேக் சந்தையில் போட்டி தீவிரமாகி வருகின்றது. பெய்ஜிங் சந்தையின் போட்டியை பாரிஸ் Baguette எவ்வாறு சமாளிக்கும் என்பது பற்றி Jay Mun கூறியதாவது:

"பெய்ஜிங்கில், மேற்கத்திய பாணி கேக் கடைகள் அதிகம். இது, எங்களுக்கு அறை கூவலாக இருக்கின்றது. பாரிஸ் Baguette 60 ஆண்டுகள் வரலாறு உடையது. நாங்கள் செவ்வனே வேலை செய்தால், மேற்கத்திய பாணி கேக் தொழிலின் சின்னமாக பாரிஸ் Baguette மாற முடியும் என நான் நம்புகின்றேன்." என்றார் அவர்.

நாள்தோறும் பாரிஸ் Baguette கடையில் வெவ்வேறு வகை மேற்கத்திய பாணி கேக்குகள் விற்பனை ஆகின்றன. தற்போது, இக்கடையில் சுமார் 250 வகையான மேற்கத்திய பாணி கேக்குகள் இருக்கின்றன.

இக்கடைக்கு அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் Feng Li அம்மையார் வேலை செய்கின்றார். அவரும், அவரின் நண்பர்களும் இக்கடையைக் கடக்கும் போது எல்லாம் உள்ளே வந்து காபி குடித்து, சில வகை கேக் வாங்கி, தின்றபடி பேசுகின்றனர்.

இக்கடையில் சுமார் 40 பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள், பெரும்பாலோர் சீனர்கள். திரு Jay Mun அன்பானவர் என்று அவர்கள் கருதுகின்றனர். 20க்கு அதிகமான வயதான பணியாளர் Wang Yao Xin கூறியதாவது:

1  2  3