கலை.......வணக்கம் நேயர்களே. இப்போது தமிழ்ப் பிரிவு 2006ம் ஆண்டு நடத்தும் இரண்டு பொது அறிவு போட்டிகள் பற்றி கூறுகின்றோம். இது பற்றி தி. கலையரசி கிளீடஸ் இருவரும் தலைமை தாங்கி விவாதிக்கின்றார்கள். கவனமாக கேட்டு வினா முன்வையுங்கள்.
கிளீடஸ்........இப்போது நீங்கள் இரண்டு பொது அறிவு போட்டிகள் நடத்த வேண்டும் என்று சொன்னீர்கள். கலை நமது நேயர்களுக்கு இவை பற்றி விபரமாக சொல்லுங்கள்.
கலை........சொல்கின்றேன். ஒன்று தமிழ் பிரிவு நடத்தும் "மேற்கு சீனாவின் முத்து" என்னும் பொது அறிவு போட்டியாகும். இந்த போட்டியில் நான்கு கட்டுரைகள் உண்டு. தனிதனியாக சீனாவின் சிங்கியாங் உய் கூர் தன்னாட்சி பிரதேசத்தின் காஷ் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கை, முஸ்லிம் பெண்களின் லட்சியம் ஆகியவை பற்றி விவரிக்கப்படுகின்றன.
கிளீடஸ்.........உங்கள் விளக்கத்தை கேட்டபின் எனக்கு புரிந்தது. அதாவது, தமிழ்ப் பிரிவின் பொது அறிவு போட்டி "மேற்கு சீனாவின் முத்து" என்ற பெயரில் நடைபெறும். அப்படியிருந்தால் இந்த போட்டி எப்போது துவங்கும்?
கலை.......போட்டி தொடர்பான நான்கு கட்டுரைகள் தயாராகியுள்ளன. இது பற்றிய 8 வினாக்கள் இடம் பெறும் வினாத்தாள் அச்சிடப்பட்டதும் நேயர்களுக்கு அனுப்பப்படும். வினாத் தாட்கள் அனுப்பப்பட்ட 10 நாட்களுக்கு பின் இந்த நான்கு கட்டுரைகள் வானொலியின் மூலம் ஒலிப்பரப்ப திட்டமிட்டுள்ளோம். ஆகவே நேயர்களும் நேயர் மன்றங்களும் அணிதிரண்டு இந்த நான்கு கட்டுரைகளையும் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும். வினாத்தாட்கள் அனுப்பிய பின் போட்டி துவங்கும் தேதி பற்றி வானொலி மூலம் அறிவிக்கப்படும்.
கிளீடஸ்......இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போது எதாவது கவனம் செலுத்த வேண்டுமா?
கலை.....கண்டிப்பாக. வினாத்தாட்களில் மிக தெளிவாக எழுதப்படுகின்றது. விடைகளை அளிக்கும் போது ஒவ்வொரு வினாவுக்கு 4 விடைகள் உண்டு. இவற்றிலிருந்து ஒரு சரியான விடையின பக்கத்தில் உள்ள வெற்றிடத்தில் "√"என்று சரி குறிப்பு போட்டால் போதும். விடைத்தாளை கத்தரிக்காமல் மொத்தமாக எங்களுக்கு அனுப்ப வேண்டும் நேயர் அட்டை எண், முழுமையான முகவரி ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டும்.
1 2 3
|