• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-13 18:54:43    
பொது அறிவு போட்டிக்கான விபரம்

cri

 

கிளீடஸ்.........சென்ற ஆண்டில் நமது பிரிவின் ஏற்பாட்டில் "சீன-இந்திய நட்புறவு "என்னும் தலைப்பில் பொது அறிவுப் போட்டி நடந்தது. கிட்டத்தட்ட 2 லட்சத்துக்குமேல் விடைத்தாள்கள் பெறப்பட்டன.

கலை..........ஆமாம். இவ்வாண்டு சீன அரசும் இந்திய அரசும் இரு நாடுகளுக்கிகடையிலான நட்புறவை மேலும் செவ்வனே வளர்க்கும் வகையில் 2006ம் ஆண்டை நட்புறவு ஆண்டாக அனுசரிக்க தீர்மானித்துள்ளன. செய்தி ஊடகமான நமது தமிழ் ஒலிபரப்பு இந்த நடவடிக்கையில் பங்கெடுப்பது இயல்பானது அல்லவா?

கிளீடஸ்.......ஆமாம். நேயர்கள் எங்களை போல இதில் கண்டிப்பாக கவனிப்பார்கள் என்று நம்புகின்றேன். தமிழ் பிரிவின் தலைமையில் "சீன-இந்திய நட்புறவு ஆண்டு" என்ற பொது அறிவு போட்டி நடத்தப்பட போகின்றதா?

கலை........ஆமாம். கடந்த ஆண்டில் நமது பிரிவின் சார்பில் இது பற்றிய பொது அறிவு போட்டி நடைபெற்ற போதிலும் இந்த முறை சீன வானொலி முதலாவது ஆசிய துறையின் ஏற்பாட்டில் தமிழ், ஹிந்தி, உருது மற்றும் பங்காளி பிரிவுகள் "சீன-இந்திய நட்புறவு ஆண்டு" என்னும் பொது அறிவு போட்டி நடத்தவுள்ளன. தமிழ் பிரிவு இதில் பங்கு கொள்ளும். ஆனால் வடிவம் மற்ற பிரிவுகள் மேற்கொள்ளும் வடிவத்திலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும்.

கிளீடஸ்.......அப்படியிருந்தால் நமது பிரிவின் நடவடிக்கை என்ன?

கலை......... சீன-இந்திய நட்புறவுக்காக "நான் என்ன செய்ய வேண்டும். என்ன செய்ய முடியும்"என்பது பற்றி கட்டுரை போட்டி நடத்தப்படும்.

கிளீடஸ்......எனக்கு புரிந்தது. "சீன-இந்திய நட்புறவு ஆண்டு" என்னும் பொது அறிவு போட்டியின் தலைமையில் தமிழ் பிரிவு கட்டுரை போட்டி நடத்தும். இதன் மூலம் கட்டுரை எழுதி அனுப்பும் வாய்ப்பு நேயர்கள் அனைவருக்கும் உண்டு. அப்படிதானே?

கலை.......ஆமாம். நேயர்கள் இந்த போட்டியில் பங்கு கொள்ள வேண்டும். "சீன-இந்திய நட்புறவு ஆண்டு"க்காக "நான் என்ன செய்ய வேண்டும். என்ன செய்ய முடியும்"என்பது பற்றி சொந்த யோசனை, சொந்த எண்ணம், சொந்த விருப்பம் என்பன எழுதலாம். இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை கேட்ட பின் கட்டுரை எழுத்த யோசிக்க துவக்கலாம்.

1  2  3