• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-13 18:54:43    
பொது அறிவு போட்டிக்கான விபரம்

cri

கிளீடஸ்.......கட்டுரை எழுதும் போது எத்தனை பக்கங்கள் எழுத வேண்டும்?

கலை.......பொதுவாக கடித தாள் அளவில் அதாவது மாணவர்கள் வீட்டு பாட பயிற்சி செய்யும் தாள் அளவில் மூன்று பக்க கட்டுரை எழுதினால் போதும்.

கிளீடஸ்......புரிந்தது. மறுபடியும் சொல்லட்டுமா?

கலை.....சொல்லுங்கள்.

கிளீடஸ்.......கட்டுரை எழுதும் போது கடித தாள் அளவில் குறைந்தது மூன்று பக்கங்களில் எழுத வேண்டும். "நான் என்ன செய்ய வேண்டும். என்ன செய்ய முடியும்"என்பது பற்றி சொந்த யோசனை, சொந்த எண்ணம், சொந்த விருப்பம் என்பனவற்றை எழுத வேண்டும். அப்படிதானே.

கலை.....ஆமாம்.

களீடஸ்......கட்டுரை எழுதிய பின் அனுப்பும் போது எதாவது குறிப்பு கடித உறையின் மேல் பொறிக்க வேண்டும்?கலை.......கண்டிப்பாக ஒரு சின்னம் பொறிக்க வேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டின் முற்பாதியில் பொது அறிவு போட்டிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் நடந்ததை விட அதிகம். விடைதாட்கள் வரும் போது தேர்வு செய்யும் போது குழப்பம் ஏற்படாமல் இருக்கும் வகையில் தனிதனியாக கடித உறையின் மேல் குறிப்பு போட வேண்டும்.

கிளீடஸ்........அப்படி என்றால் எத்தகைய குறிப்பு பொறிக்க வேண்டும்?இது பற்றி உங்களுக்கு எதாவது யோசனை உண்டா?

கலை......யோசனை மட்டுமல்ல பின்பற்றி கொள்ள வேண்டிய கோட்பாட்டை நிறைவேற்ற வேண்டும். அதாவது "கட்டுரை போட்டி"என்ற சொற்கள் கடித உறையின் மேல் வலது பக்கத்தில் போட வேண்டும். ஒரு கடித உறையில் இரண்டு, மூன்று கட்டுரைகள் அனுப்ப விரும்பினால் தாளாரமாக செய்யலாம். தனிதனியாக கட்டுரை அனுப்ப விரும்பினாலும் அனுப்பலாம். ஆனால் கடித உறையின் மேல் வலது பக்கத்தில் "கட்டுரை போட்டி"என்று குறிப்பிட வேண்டும். இதை மனதில் வையுங்கள்.

கிளீடஸ்........கட்டுரை அனுப்புவதில் கவனம் கொள்ள வேண்டியவை பற்றி அதாவது கட்டுரையின் நீளம், குறிப்பு பற்றி நாங்கள் விவாதித்துள்ளோம். குறிப்பிடத்தக்க அம்சம் உண்டா?

கலை.....நமது வானொலியில் பொது அறிவு போட்டி நடத்துவது பற்றி உங்களைப் பொறுத்தவரை புதிய அனுபவம். வழக்கம் போல ஒவ்வொரு கட்டுரையின் மேல் நேயர் அட்டை எண், விபரமான முகவரி ஆகியவை தெளிவாக எழுத வேண்டும். இது நண்பர்கள் தெளிவாக மறக்காமல் மனதில் பதிந்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டில் 3 பொது அறிவு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொரு போட்டியின் கோரிக்கைகளையும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

கிளீடஸ்......ஆமாம். இந்த முறை நாங்கள் விவாதித்து கேட்பது போதாது. வேறு எதாவது வழி முறை மூலம் இந்த விவாதத்தை மீண்டும் ஒரு தடவை நேயர்களுக்கு அறிவிக்க முடியுமா?

கலை.......வானொலி மூலம் ஒலிபரப்புவது மட்டுமல்ல இணையத்தின் நேயர் கடித பகுதியில் இன்று நாங்கள் விவாதித்துள்ள விபரங்களை வெளியிட வேண்டும். வசதி இருக்கின்ற நேயர்கள் இணையத்தில் "சீன-இந்திய நட்புறவு ஆண்டு" என்னும் பொது அறிவு போட்டி பற்றிய தகவலை படியுங்கள். குறிப்பு எழுதுங்கள்.

கிளீடஸ்...... "சீன-இந்திய நட்புறவு ஆண்டு" என்னும் பொது அறிவு போட்டி எப்போது துவங்கும். எப்போது நிறைவடையும் இது பற்றி நாங்கள் அவ்வளவு விபரமாக விவாதிக்க வில்லை. கலை நீங்கள் நேயர்களுக்கு சொல்லுங்கள்.

கலை.....நான் சொல்கின்றேன். இந்த கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி கேட்ட பின் நீங்கள் கட்டுரை எழுதி அனுப்பலாம். ஜுன் திங்கள் 30ம் நாள் நிறைவு நாளாகும். ஒரு திங்கள் கழிந்த பின் அதாவது ஜுலை திங்கள் கடைசி நாளில் கட்டுரை போட்டியில் முதல் இரண்டாவது மூன்றாவது பரிசு பெயர் பட்டியலை அறிவிப்போம். ஆகவே சீக்கிரமாக கட்டுரை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.


1  2  3