• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-19 09:05:15    
சீனாவில் சமூகக் காப்புறுதி

cri

கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் சமூகக் காப்புறுதி பிரச்சினை பல்வேறு துறைகளால் கவனிக்கப்படுகிறது. சீனர்களின் வாழ்க்கையில் சமூகக் காப்புறுதிக் கொள்கை என்ன மாற்றம் அடைந்துள்ளதை அறிந்து கொள்ளும் வகையில், எமது செய்தியாளர் பெய்ஜிங் மாநிகரில் ஒரு குடும்பத்துக்குச் சென்றார்.

முதியோர் லி ஜியாஜி பெய்ஜிங் மாநகரின் ஜின் சுங் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வருகிறார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று சுமார் 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் பூங்காவில் உலா சென்று, பழைய நண்பர்களுடன் பழகுகிறார். தங்களது ஓய்வு ஊதியம் பற்றி அவர்கள் விவாதிப்பதுண்டு.

"நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற போது, ஓய்வு ஊதியம் 75 யுவான் மட்டுமே. கடந்த சில ஆண்டுகளாக, இது அதிகரித்து வருகிறது. தற்போது 1000 யுவானுக்கு அதிகமாக பெறுகின்றேன். செலவுக்கு இது போதும். மேலும் அதிகரித்தால் நல்லது தான்" என்றார் அவர்.

இந்த முதியவர் ஒரு தொழிற்சாலையில் 31 ஆண்டுகள் வேலை செய்து, 1984ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அவரின் ஓய்வு ஊதியம் முன்பை விட பெருமளவில் அதிகரித்த போதிலும், பெய்ஜிங் மாநகரின் குறைந்தபட்ச வாழ்க்கை காப்புறுதித் தொகையை நெருங்குகிறது. தம்மைப் போன்ற முதியோருக்கு அவ்வளவு அதிகமான பணம் தேவையில்லை என்று லி ஜியாஜி குறிப்பிட்ட போதிலும், ஓய்வு ஊதியம் மேலும் அதிகரிக்கப்படும் என்னும் அவரின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முடிகிறது.

1  2  3