• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-19 09:05:15    
சீனாவில் சமூகக் காப்புறுதி

cri

தமது ஓய்வு ஊதியம் பற்றி லி ஜுன்பெங் மனநிறைவு அடைகிறார். 1997ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு முடிவில், முதுமை தலைமுறையினருக்கு பழைய வழிமுறை, நடு நிலை தலைமுறையினருக்கு இடைநிலை வழிமுறை, புதிய தலைமுறையினருக்கு புதிய வழிமுறை என்று வகுக்கப்படுகிறது. லி ஜுன்பெங் நடு நிலை தலைமுறையைச் சேர்ந்தவர். இதனால்தான், அவரின் நிலை தமது தந்தையை விட நன்றாக உள்ளது. இதற்குக் காரணம் பற்றி, சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் சமூகக் காப்புறுதி ஆய்வகத்தின் தலைவர் லி ஷௌகுவாங் கூறியதாவது—

"அவரைப் போன்ற தலைமுறையினர்களின் முதுமை காப்பீட்டு கணக்கில் ஒரு குறை இருக்கிறது. ஆனால் வெளியிடப்பட்ட முடிவினால், இது நிறைவு செய்யப்பட்டது. தவிர, முதுமை தலைமுறையினருக்கும் நடு நிலை தலைமுறையினருக்கும் அரசு உதவி தொகை வழங்குகிறது. சராசரியான ஊதியம் அதிகரிப்பதோடு, லி ஜுன்பெங் போன்ற தலைமுறையினரின் வருமானம் லி ஜியாஜியின் வருமானத்தை விட அதிகம்" என்றார் அவர்.

இந்த குடும்பத்தில் 28 வயதான லி சியௌபெங், முதுமை மற்றும் மருத்துவ காப்பீட்டில் அவ்வளவு கவனம் செலுத்தவில்லை. பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து கொண்ட பின், அந்நிய நிறுவனத்தில் அவர் பணி புரிந்து வருகிறார். உழைப்பு ஒப்பந்தம் உருவானது முதல், ஒவ்வொரு மாதத்திலும் முதுமை காப்பீட்டுக் கட்டணம், மருத்துவ காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வேலையின்மைக் காப்பீட்டுக் கட்டணத்தை இந்த நிறுவனம் அவருக்காக செலுத்தி வருகிறது. ஆனால், பல இளைஞர்களைப் போல், வேலையில் ஈடுபடும் தொடக்கத்தில் இந்த மூன்று காப்பீடுகளை முழுமையாக அனுபவிக்கும் இந்தத் தலைமுறையினர்கள் இதை மனதில் வைக்கவில்லை என்று முதியோர் லி ஜியாஜி முறையிட்டார். இந்தக் குடும்பத்தில், முதியோர்கள் வாழ்க்கை உத்தரவாரத்தில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நுகர்வுக்காக இளைஞர் கடன் வாங்குவதுண்டு. லி சியௌபங் வங்கிக் கடன் பெற்று, ஒரு காரை வாங்கினார். அவர் கூறியதாவது—

"தற்போது அந்நிய நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் மூன்று காப்பீடுகளை வழங்குகின்றன. சட்டப்பூர்வ நிறுவனங்கள் பணியாளர்களுக்கு இந்த மூன்று காப்பீடுகளை வழங்க வேண்டும். ஆனால் எதிர்காலத்தில் யார் இதைச் சார்ந்திருப்பார். இளமையில் பணத்தை ஈட்டினால், தேவையான அனைத்தும் கிடைக்கலாம்" என்றார் அவர்.

தனிநபரின் கணக்கு குறிப்பு முழுமையாக்கப்பட்டு, நாட்டின் நிதி ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தபட்டுள்ளதால், ஓய்வூதியப் பிரச்சினை, லி சியௌபங் போன்ற இளம் தலைமுறையினருக்கு அக்கறை உள்ள பிரச்சினையாக இல்லை. அடிப்படை காப்புறுதி உறுதிப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில், எதிர்காலத்துக்கு முதலீடு செய்வதை அவர்கள் கருத்தில் கொள்ளலாம் என்று பேராசிரியர் லி ஷௌகுவாங் கூறினார்.

சீனாவின் அதிகமான மக்கள் தொகையையும் குறிப்பிட்ட காலத்துக்கு முன் வரும் முதியோர் பிரச்சினையையும் எதிர்நோக்கி, சீனாவின் சமூகக் காப்புறுதி கொள்கை மேலும் சீர்படுத்தப்பட வேண்டும். சீனாவின் சமூகக் காப்புறுதி முறைமை, மேலும் அதிகமான மக்களுக்கு நன்மை பயக்கும் திசையை நோக்கி வளர்ந்து வருகிறது என்று சொல்லலாம்.


1  2  3