
உண்மையில், 1951ஆம் ஆண்டில், உழைப்பு காப்பீட்டு விதிகளை அப்போதைய சீன அரசவை வெளியிட்டது. சமூகக் காப்புறுதி பற்றிய சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து தொடங்கி, முதுமை காப்பீடு, மருத்துவ காப்பீடு, தொழில் விபத்துக்கான காப்பீடு, மகப்பேறு காப்பீடு உள்ளிட்ட பலநோக்க உழைப்பு காப்பீட்டு முறைமை உருவாக்கப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டுகளில், பொருளாதார அமைப்பு முறையின் சீர்திருத்தத்துடன், நவீன தொழில் நிறுவன அமைப்பு முறையை நிறுவுவது, சீனாவின் முக்கிய பணியாக மாறிவிட்டது. சமூக விவகாரங்களுக்கு தொழில் நிறுவனம் பொறுப்பேற்கும் பழைய முறை சந்தைப் பொருளாதாரத்துக்குப் பொருத்தமற்றது என்பதால், அதற்குப் பதிலாக, முதுமை காப்பீடு, மருத்துவ நிதி உள்ளிட்ட சமூகமயமாக்க நிர்வாகம் நிறுவப்பட்டது. 1997ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விதிகளுக்கு இணங்க, சமூகக் காப்புறுதியில் சேர வேண்டுமானால், தொழில் நிறுவனம், சமூகம், தனிநபர் ஆகிய 3 தரப்புகளும் கட்டணத்தைக் கட்ட வேண்டும். ஆனால், முதியோர் லி ஜியாஜி முன்னதாக வேலையிலிருந்து ஓய்வு பெற்று, இக்கட்டணத்தைக் கட்டவில்லை என்பதால், சமூகக் காப்புறுதியில் சேர முடியாது.
ஆனால், தமது மகன் லி ஜுன்பெங் சீர்திருத்தப்பட்ட சமூகக் காப்புறுதியில் சேர்ந்தது அவருக்கு மகிழ்ச்சி தருகிறது. 62 வயதான லி ஜுன்பெங் 2 ஆண்டுகளுக்கு முன் அரசு சார் தொழில் நிறுவனம் ஒன்றில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் கூறியதாவது—
"புத்தாண்டுக்கு முன் ஓய்வு ஊதியம் மீண்டும் ஒரு முறை சீராக்கப்பட்டது. சுமார் 2000 யுவான் கிடைக்கும். இது பரவாயில்லை. கடந்த தலைமுறையினரின் ஓய்வு ஊதியத்தை விட இது அதிகம்" என்றார் அவர்.
1 2 3
|