• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-21 13:30:08    
குவாங் சியில் நாட்டுப்புறப் பண்பாடு பாதுகாப்பு

cri

தென் மேற்கு சீனாவின் குவாங் சி சுவாங் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் சுவாங் இனத்தவர்களிடையே நாட்டுப்புறப்பாடல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால், சிறுபான்மை தேசிய இனங்களின் வாழ்க்கை மேலும் நாகரிகமடைந்து விட்டதால், நாட்டுப்புறப் பாடல் போன்ற தேசிய இன நாட்டுப்புற பண்பாட்டு வடிவம் தொடர்ந்து முழுமையாக வெளிப்படுமா என்று ஐயம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், இது பற்றி கூறுகின்றோம்.

சுவாங், ஹன், இயோ, மியோ, தெங் முதலிய 12 தேசிய இனங்கள் குவாங் சி தன்னாட்சிப் பிரதேசத்தில் வசிக்கின்றன. பல்வேறு தேசிய இனங்களிடையே, வடிவம் உடைய பண்பாட்டு மரபுச்செல்வங்கள் மட்டுமல்ல, வடிவம் இல்லாத பண்பாட்டு மரபுச்செல்வங்களும் பெருமளவில் தோன்றியுள்ளன. கட்டுக்கதைகள், பாட்டு, இசை, நடனம், இசை நாடகம், ஓவியம், செதுக்குக்கலை, பின்னல் வேலை முதலிய கலைகளும் நுட்பங்களும், பல்வகை மரியாதை வைபவங்கள், விழா, தேசிய இன விளையாட்டுக்கள் ஆகியவையும் இவ்விரண்டில் அடங்கும். இருப்பினும், வெளிநாட்டுப் பண்பாடு, நவீன பண்பாடு ஆகிய இரண்டின் மோதலில், சீனாவின் பண்பாட்டு வாழ்க்கை சூழலில் பெரிய மாற்றம் காணப்பட்டுள்ளது. தேசிய இனத்து நாட்டுப்புற பாரம்பரிய பண்பாடு நீடிக்கும் சூழல் தீவிரமாக மோசமாகியுள்ளது. வரலாற்று முக்கியத்துவமும் பண்பாட்டு மதிப்பும் படைத்த ஒரு தொகு பண்பாட்டு வளங்கள் வேறுபட்ட அளவில் சீர்குலைக்கப்பட்டன. தற்போது, பெய்சிங்கில் வெளிநாட்டு தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் லு சியே செள, குவாங் சி சுவாங் இனத்தவராவார். இது பற்றி குறிப்பிடுகையில், அவர் கூறியதாவது:

"குழந்தைப் பருவத்தில், நாட்டுப்புற பாடல் பாடுவோர் அதிகமானவர்கள் மலைகளில் பணி புரியும் போது, அல்லது மாடுகளை மேய்க்கும் போது, இளம் ஆண்களும் பெண்களும் நாட்டுப்புறப்பாடல் பாடினர். ஆனால், இப்போது பண்பாடும் நவீன நாகரிகமும் வளர்ந்துள்ள காரணமாக, நாட்டுப்புறப்பாடல் பாடுவோர் குறைந்து வருகின்றனர். முதியவர்கள் இதை விரும்புகின்றனர். இளைஞர்களுக்கு பாப் இசை மீது பிரியம்" என்றார்.

1  2  3