
தேசிய இனப் பண்பாட்டின் வளம் சீர்குலைக்கப்பட்டால், மீள முடியாது. தேசிய இனப் பண்பாட்டு சுற்றுலா தொடர்ந்து வளர்ந்திட, தேசிய இனப் பண்பாட்டையும் அதன் சூழலையும் பாதுகாக்கும் கொள்கையை பின்பற்ற வேண்டும். பாதுகாப்புடன் அவற்றை வளர்க்க வேண்டும். வளர்ச்சிப் போக்கிலே, பொது மக்கள், தேசிய இனப் பண்பாட்டின் மதிப்பை உணரச் செய்ய வேண்டும். இதன் மூலம், தேசிய இனப் பண்பாட்டைப் பாதுகாப்பதில் பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கலாம் என்று அவர் கருதினார்.
கடந்த 80ம் ஆண்டுகள் முதல், குவாங் சி அரசு, பிரதேசம் முழுவதிலும், தேசிய இன நாட்டுப்புற பாரம்பரிய பண்பாட்டைப் பாதுகாக்கும் பணிகள் பலவற்றை செயல்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, தேசிய இன நாட்டுப்புற பாரம்பரிய பண்பாட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது; தேசிய இன பண்பாட்டு பாதுகாப்புக்கான திட்டப்பணியை வகுத்தது; தேசிய இன பாரம்பரிய விழாக்களை நடத்தியது; சிறுபான்மை தேசிய இனங்களின் பழம்பெரும் நூல்களை சேகரித்து தொகுத்து வெளியிட்டது; நாட்டுப்புற கதைகள் இசை நாடகம், ஆடல் கதைப் பாடல் முதலியவற்றை மதிப்பித்து வெளியிட்டது. அரசு ஏற்பாடு செய்த இந்நடவடிக்கைகள் தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டைப் பாதுகாப்பதற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சுவாங் இனத்தைச் சேர்ந்த லு சு செள கூறினார்.

"இத்தகைய நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றுவது திண்ணம். அவற்றின் மூலம் இளைஞர்கள், இத்தகைய பண்பாட்டை மேலும் ஆழமாகப் பரிந்து கொள்ள முடியும். அன்றி, அதன் மீது அக்கறை காட்டுவார்கள். இப்பண்பாட்டை தொடர்ந்து வெளிக்கொணர முடிந்தால், நல்லதாயிருக்கும்" என்றார்.
கடந்த ஜனவரி முதல் நாளிலிருந்து "குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்து தேசிய இன நாட்டுப்புறப் பாரம்பரிய பண்பாட்டு பாதுகாப்புக்கான விதிகள்" அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளன. சட்டப்படி அங்குள்ள பண்பாட்டைப் பாதுகாக்கும் பணியை செவ்வனே செய்வதற்கு இவ்விதிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1 2 3
|