• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-21 13:30:08    
குவாங் சியில் நாட்டுப்புறப் பண்பாடு பாதுகாப்பு

cri

கடந்த சில ஆண்டுகளாக, சிறுபான்மை தேசிய இனத்து நாட்டுப்புறப் பண்பாடு எதிர்நோக்கும் இத்தகைய நெருக்கடியை சீன சமூகம் படிப்படியாக உணரத் துவங்கியுள்ளது. தேசிய இன நாட்டுப்புற பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சீனாவின் பல்வேறு துறைகள் படிப்படியாக கவனிக்க தொடங்கியுள்ளன. இத்துறையில் குவாங் சியின் தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டின் பாதுகாப்புப் பணி முன்வரிசையில் நிற்கிறது. குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பண்பாட்டுப் பகுதியின் துணை தலைவர் செங் இன் ஹங் அம்மையார் பேசுகையில் தேசிய இன நாட்டுப்புறப்பண்பாடு, உயிருள்ள பண்பாடு என்றும், மனிதரிடமிருந்து குறிப்பாக, கையேறுவோரிடமிருந்து இது பிரிக்கப்பட முடியாதது என்றும் கூறினார். கையேறுவது என்பது, தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டின் பாதுகாப்புப் பணியில் பெரும் முக்கியமான ஒரு நடவடிக்கை என்றார், அவர்.

அவரை போல், குவாங் சி தேசிய இனப் பண்பாட்டுக்கலை ஆய்வகத்தின் தலைவர் லேங் மின் ஜிங்கும் குவாங் சி தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டைப் பாதுகாக்கும் பணியில் மிகுதியும் கவனம் செலுத்துகின்றார். தேசிய இன நாட்டுப்புற பண்பாடு, ஒரு தேசிய இனத்தின் உயிர். ஒரு தேசிய இளம், இதர தேசிய இனங்களிடமிருந்து வேறுபடும் அடையாளமாக இது திகழ்கின்றது என்று அவர் கருத்து தெரிவித்தார். எமது செய்தியாளரிடம் தமக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் பற்றி அவர் தெரிவித்தார். ஒரு முறை, சோதனைக்காக அவர் குவாங் சியின் ஜிங் சோ சென்றார். உள்ளூரிலுள்ள சித்திரத்தையல் மன்னர் சூ ஜிங் சிங் யைச் சென்று பார்த்தார். சூ ஜிங் சிங் நாட்டுப்புறப்பாடலை நன்றாக பாட முடியும். ஆனால், தமது சித்திரத்தையல் நுட்பத்தை மகளுக்குச் சொல்லிக்கொடுத்தார். ஏனெனில், நாட்டுப்புறப்பாடல், அவருக்கு பணம் கொடுக்க முடியாது. இது பற்றி அவர் கருத்து தெரிவித்ததாவது:

"ஒரு தேசிய இனம் என்றால், அதன் இருப்பும் வளர்ச்சியும் பொருளாதாரத்தைச் சார்ந்திருக்க வேண்டும். இது மட்டுமின்றி, ஆன்மீக இயலையும் பொறுத்திருக்கின்றது. அரசு, சிறுபான்மை தேசிய இனங்களுக்கு அறிவுறுத்திய பின், தத்தமது பண்பாடு, மதிப்புடையவை. அரியவை என அவை புரிந்து கொண்டால் தேசிய இன தன்மதிப்புக்கும் தேசிய இன இருப்புக்கும் பெரும் துணையாக இருக்கும். நன்மை பயக்கும். நாட்டுப்புற பண்பாடும் கையேறப்படும்" என்று அவர் சொன்னார்.

1  2  3