• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-09 19:52:57    
அன்றாட வாழ்க்கை பாதுகாப்பு

cri
ராஜா......கலை உங்கள் மகள் எப்போதாவது பள்ளிக்குப் போவதற்கு முன்பு வயிறுவலிக்குதுன்னு சொல்லி அழுதிருக்கிறாளா?

கலை.....இல்லை. உங்கள் குடும்பத்தில் எப்படி?

ராஜா.....எனது மூன்று குழந்தைகளுமே பள்ளிக்குப் போகாமல் இருக்க தலைவலி, வயிற்றுவலி என்று சாக்குப்போக்கு சொன்னதில்லை. ஆனால் நான் சொல்லியிருக்கேன்.

கலை.....அப்படியா. பள்ளிக்குச் செல்ல உங்களுக்குப் பயமாக இருந்ததா?

ராஜா....ஆமா. அதிலும் கணக்குப் பாடத்தையும் கணக்கு வாத்தியாரையும் நினைத்தாலே எனக்கு வயிற்றைக் கலக்கும். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?

கலை.....என்னது?

ராஜா....வயிற்றுவலி, ஒன்றுதான் டாக்டர்களால் எளிதில் கண்டுபிடிக்கப்பட முடியாத ஒரு நோய். அதனால் தான் பள்ளிக்குச் செல்லப் பயப்படும் பெரும். பாலான குழந்தைகள். அம்மா வயிறு வலிக்குது. நான் இன்னைத்து ஸ்கூலுக்கு போக மாட்டேன். அப்படினு முரண்டுபிடிக்குது.

கலை.....இதற்கு என்ன காரணம்?

ராஜா....ஒரு குழந்தை வயிறுவலிக்குது என்று காலையில் சொல்கிறது. டாக்டரால் காரணம் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால் மதியத்திற்குள் எல்லாம் சரியாகி விடுகின்றது. என்றால் அந்தக் குழந்தைக்குப் பல்ளிக் கூடப் பயம் இருக்கிறது என்று ஜெர்மனியின் கோலோன் பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவப் பேராசிரியர் ஜெர்ட் லெஹ்ம்குல் கூறுகின்றார்.

1  2  3