• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-09 19:52:57    
அன்றாட வாழ்க்கை பாதுகாப்பு

cri

கலை.....பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடத்தில் எந்த மாதிரியான பயம் இருக்க முடியும்?

ராஜா....மூன்று வகையான பள்ளிக் கூடப் பயங்கள் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். முதல் வகை பயம், பெற்றோரை விட்டுப் பிரிந்திருக்க வேண்டுமே என்பது. இந்த வகை பயம் மழலையர் பள்ளிக்குச் செல்லும் பெரும்பாலான குழந்தைகளிடம் காணப்படுகின்றது. கவிஞர் பாரதிதாசன் "தலைவலி பூச்சூடி உன்னை பாட சாலைக்குப் போவென்று சொன்னாள் அன்னை"என்று பாடினார். ஆனால் குழந்தைகளே அழுது அடம்பிடித்து அலங்காரம் கலையும் படி கண்ணீர் வடித்து பள்ளிக்குப் போக மாட்டேன் என்று முரண்டுபிடிக்கும் பல காட்சிகளை நான் கண்டிருக்கிறேன். கணவனும் மனைவியும் பிரிந்து வாழும் நிலையில் அல்லது அம்மாவுக்கோ அப்பாவுக்கோ கடுமையான நோய் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் அவர்களுடைய குழந்தைகளுக்கு இந்த வகை பள்ளிக் கூடப் பயம் ஏற்படுகின்றது. அப்படிப்பட்ட குழந்தைகள் எப்போதும் பெற்றோருடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவதால் அவர்களுக்கு பள்ளிக் கூடத்தைப் பற்றி நினைத்தாலே வயிற்றைக் கலக்குகிறது.

கலை.....ராடா, இதை எப்படி சமாளிப்பது?

ராஜா.....பொதுவாக இத்தகைய பெற்றோர் குழந்தை அழுவதைக் கண்டு கவலைப்பட்டு "வேண்டாம் கண்ணு இன்னைக்கி நீ பள்ளிக் கூடம் போக வேண்டாம்"என்று சொல்லி விடுகிறார்கள். இது அவர்கள் தங்களை அறியாமலே செய்யும் தவறு. மாறாக குழந்தையை எப்படியாவது சமாதானப்படுத்தி பள்ளிக்குப் போகும் படி தூண்ட வேண்டும். அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் சுதந்திரமாக வாழ்வதற்கு பயிற்சி கிடைக்கும்.

கலை.....சரி, இரண்டாவது வகை பள்ளிக் கூடப் பயம் என்ன?

ராஜா.....இரண்டாவது வகை பள்ளிக் கூடப் பயம் ஒரு வகையான சமூகப் பதற்றத்தினால் உண்டாவது. அதாவது குழந்தைகளிடையே ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகி மற்றவர்கள் கேலி செய்வார்களோ, ஆசிரியர் திட்டுவாரோ, அடுத்தவர்கள் முன்னால் சரியாக பதில் சொல்ல முடியாமல் அவமானப்பட வேண்டியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுவிடுகிறது. இத்தகைய பயம் தொடக்கப் பள்ளி மாணவர்களிடையே அதிகமாக உள்ளது என்கிறார் ஹிடல்பெக் பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மனநோய் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் பிஃரான்ஸ் ரெஷ். தொடக்கப் பள்ளி முடித்து உயர் நிலைப் பள்ளியில் சேரப் போகும் மாணவர்களுக்கு பெரிய வகுப்பு பயம் வந்து விடுகின்றது.

1  2  3