பெரிய வகுப்பில் என்ன பாடம் படிப்பது எப்படிப் படிப்பது, நன்றாகப் படிக்க முடியாவிட்டால் மற்றவர்கள் கிண்டலடிப்பார்களே என்ற பயத்தால் "அம்மா வயிறு வலிக்குது"என்று சொல்லி பள்ளிக்கு மட்டம் போடப் பார்ப்பார்கள். 
கலை.....இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது?
ராஜா......இத்தகைய பயம் நியாயமானது. பெரும்பாலான குழந்தைகளுக்கு பாடத்திட்டம் அவர்களுடைய திறமைக்கு பொருந்துவதாக இருப்பதில்லை. கலைப் பாடங்களில் ஆர்வமுள்ள குழந்தைகளை அறிவியல் வகுப்பில் சேரும்படி கட்டாயப்படுத்தினால் இத்தகைய பயம் வந்துவிடும்.
கலை.....மூன்றாவது வகை பள்ளிக் கூடப் பயம் பற்றி சொல்லுங்கள்.
ராஜா.....ஒவ்வொரு வகுப்பிலும் ஒன்றிரண்டு முரட்டுமாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய உடல் வலிமையால் மற்ற மாணவர்களை மிரட்டுவார்கள். சில சமயங்களில் ஆசிரியர்களும் இத்தகைய வேலை செய்வதுண்டு. நான் ஏழாம் வகுப்பு படித்த போது அண்ணாமலைக் கனி என்றொரு ஆசிரியர் இருந்தார். அவர் எப்போதுமே கையில் பிரம்போடுதான் காட்சி தருவார். அவர் வராந்தாவில் நடந்து வரும் போதே மாணவர்கள் ஓடி ஒளிவார்கள்.
கலை....இப்படிப்பட்ட நிலையில் என்ன செய்யலாம்?
ராஜா.....பள்ளி நிர்வாகத்திடம் பேசி முரட்டு மாணவர்களை கட்டுப்படுத்தும் படி சொல்ல வேண்டும். பிரம்போடு திரியும் ஆசிரியரிடம் நேரடியாகப் பேசி விளக்க வேண்டும். இது பெற்றோரின் கடமை. சில சமயங்களில் இந்த மூன்று வகைப் பள்ளிக் கூடப் பயங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தே இருக்கும். பெற்றோரைப் பிரியும் கவலையும் முரட்டு மாணவர்களின் அடாவடித்தனமும் சேர்ந்து பிள்ளைகளை பயமுறுத்தலாம்.
கலை.....ஆகவே ஒரு குழந்தை வயிறுவலிக்குது என்று சொல்லி, பள்ளிக்குப் போக மறுத்து முரண்டுபிடிக்குமானால் பெற்றோர்கள் அதனுடைய வயிற்றை மட்டுமல்ல மனதையும் பார்க்க வேண்டும். 1 2 3
|