• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-10 09:20:05    
அன்னிய துரித உணவினால் ஏற்படும் பிரச்சினைகள்

cri

சீனாவில், Mcdonalds மற்றும் KFC போன்ற அன்னிய துரித உணவு வகைகளை மக்கள் நாளுக்கு நாள் விரும்புகின்றனர். இதற்கிடையில், இவற்றுக்கு எதிரான குரல் நாளுக்கு நாள் வன்மையாகி வருகின்றது.

அன்னிய துரித உணவினால் ஏற்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் உடல் நல பிரச்சினை குறித்து, சீனப் பிரமுகர்கள் சிலர் கவலைப்படுகின்றனர். அன்னிய துரித உணவகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் தலையிட, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பெய்சிங் மாநகரின் மேற்கு பகுதியில் உள்ள Mcdonalds உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர்களில் குழந்தைகள் மிக அதிகம். இரண்டு குழந்தைகள் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தனர்.

"அப்பா என்னை Mcdonaldsக்கு அழைத்து வந்து உணவு உட்கொள்ள நான் விரும்புகின்றேன். Mcdonaldsயின் உணவு வகைகள் இனிப்பானவை, சுவையானவை. தவிர, விளையாட்டுப் பொம்மைகள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன." என்றார் ஒரு குழந்தை.

"விரும்புகின்றேன். ஏனென்றால் Mcdonaldsயில் கோழியின் இறக்கைகள் இருக்கின்றன. பொதுவாக நான் கோழியின் இறக்கைகளை உட்கொள்ள விரும்புகின்றேன்." என்றார் மற்றொரு குழந்தை.

இந்த குழந்தைகளைத் தவிர, விரைவான வாழ்க்கை கொண்ட இளைஞர்கள், Mcdonalds மற்றும் KFC போன்ற அன்னிய துரித உணவகங்களுக்கு அடிக்கடி செல்கின்றனர். இடைநிலை பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், காதலர்கள் ஆகியோர், அடிக்கடி இந்த துரித உணவகங்களில் உணவு உட்கொண்டு, நேரம் குறித்து சந்தித்துக் கொள்கின்றனர். சீனாவில் உள்ள பல அன்னிய துரித உணவகங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது.

1  2  3