
புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவில் Mcdonalds சங்கிலி உணவகங்களின் எண்ணிக்கை சுமார் 700ஆகும். 2004ஆம் ஆண்டின் இறுதியில், KFC சங்கிலி உணவகங்களின் எண்ணிக்கை 1200ஐ தாண்டியது. சீனாவில் Pizzahut, Original உள்ளிட்ட Pizza உணவகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த அன்னிய துரித உணவு வகைகள் செழிப்பாக இருக்கும் வேளையில், Mcdonaldsயின் தாய்நாடான அமெரிக்காவில், மொகென் என்னும் இளைஞர் Mcdonaldsஐ எதிர்க்கத் துவங்கினார்.
2004ஆம் ஆண்டில், ஒரு திங்களுக்குள் Mcdonaldsயின் உணவுகளையும் பானங்களையும் மட்டுமே மொகென் உட்கொண்டார். ஒரு திங்களுக்குப் பின், மொகெனின் எடை 12 கிலோகிராம் அதிகரித்தது. அவரின் உடலில் கோளாறு ஏற்பட்டது. இம்மாற்றங்கள் ஆவணப்படம் ஒன்றில் மொகென் பதிவு செய்தார். உலகில் சில புகழ் பெற்ற துரித உணவு வகைகள், பொது மக்களின் உடல் நலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்பதை மக்களுக்கு அவர் தெரிவிக்கின்றார்.

சீனாவில் மொகென் போன்ற, Mcdonaldsஐ எதிர்ப்பவர்கள் மென்மேலும் அதிகரித்து வருகின்றனர். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டி உறுப்பினர் Zhang Jiao மற்றும் சீன ஊட்டச்சத்து இயல் ஆய்வக துணைத் தலைமைச் செயலாளர் Yang Yue Xin அம்மையார் அவர்களில் இருவராவர்.
2003ஆம் ஆண்டின் துவக்கத்தில், தொலைக்காட்சியில் ஒரு சிறுமி பற்றிய உண்மையான கதையை திரு Zhang Jiao பார்த்தார். Mcdonaldsயின் பரிசு ஒன்றைப் பெற, ஒரு திங்களுக்குள் hamburgerகளை மட்டுமே இந்த சிறுமி உட்கொண்டார். இதற்குப் பின், அன்னிய துரித உணவில் திரு Zhang Jiao கவனம் செலுத்தத் துவங்கினார்.
கடந்த பல ஆண்டுகளில், ஊட்டச்சத்து இயல் ஆய்வில் Yang Yue Xin அம்மையார் ஈடுபட்டுள்ளார். அன்னிய துரித உணவு, நொறுக்குத் தீனியாகும் என்று அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது:
"Mcdonalds, KFC, Pizzahut உள்ளிட்ட உணவகங்களின் உணவு வகைகளில் இடம்பெறும் கொழுப்புச்சத்து, புரதச்சத்து மற்றும் கலோரி அளவு மிக அதிகம் என்ற பிரச்சினை கடுமையானது. தவிர, உணவுகளின் வகைகள் குறைவு." என்றார் அவர்.
1 2 3
|