• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-10 09:20:05    
அன்னிய துரித உணவினால் ஏற்படும் பிரச்சினைகள்

cri

1995ஆம் ஆண்டில், "அன்னிய துரித உணவை கேள்வி எழுப்பும் முதலாவது கட்டுரையை Yang Yue Xin வெளியிட்டார். இதற்கு பிந்திய 11 ஆண்டுகளாக, அன்னிய துரித உணவு, மக்களின் உடல் நலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று அவர் உறுதியாகக் கருதி வருகின்றார்.

Mcdonalds சங்கிலி உணவகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், சட்ட இயற்றலை மேம்படுத்த வேண்டும் என்று Yang Yue Xin கருதுகின்றார். ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில், மிக அதிக கொழுப்புச்சத்து மற்றும் கலோரி கொண்ட துரித உணவு பற்றிய விளம்பரங்களை தொலைக்காட்சியின் முக்கிய நேரத்தில் ஒளிபரப்ப தடைவிதிக்கும் சட்டம் வெளியிட்டது. ஆனால், சீனாவில், அன்னிய துரித உணவு தொழில் நிறுவனங்களின் பிரச்சாரம் எவ்வித கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லை. அவர் கூறியதாவது:

"தூய்மையற்ற உணவுகளை உட்கொண்டால், நோய் தாக்கம். நாட்டின் சட்டம் தூய்மையற்ற உணவுகளை கட்டுப்படுத்துகின்றது. ஆனால், உணவுகளின் ஊட்டச்சத்து சரிசமமின்மை என்ற பிரச்சினை அல்லது ஊட்டச்சத்து நியாயமற்ற பிரச்சினை தீர்க்கப்பட வில்லை. இதனால், இத்துறையில் சட்டத்தை இயற்ற வேண்டும்" என்றார் அவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், சீனாவில் அன்னிய துரித உணவு வகைகளின் பாதுகாப்பு பிரச்சினைகள் எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக, Mcdonaldsயின் உருளைக்கிழங்கு வறுவலில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் இருக்கக்கூடும். இதனால், Yang Yue Xin மற்றும் Zhang Jiao போன்ற பிரமுகர்கள், அன்னிய துரித உணவு பிரச்சினைகளில் மேலும் கவனம் செலுத்துகின்றனர்.

திரு Zhang Jiao பேசுகையில், சிறுவர்-இளைஞர்களின் உடல் நலத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கடிய அன்னிய துரித உணவு மீதான கட்டுப்பாட்டை அரசு வாரியம் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"அன்னிய துரித உணவினால், சிறுவர்-இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பில் பெரும் கவனம் செலுத்த வேண்டும். இப்பிரச்சினை பற்றி ஆய்வு செய்ய, அரசின் நிர்வாக வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும்." என்றார்.

இவ்வாண்டு, சீன அரசின் விவகாரங்களில் பங்கெடுத்து, இவை பற்றி விவாதிப்பதன் மூலம், உணவு பாதுகாப்பு தொடர்பான சட்டமியற்றலை வெகு விரைவில் மேம்படுத்த வேண்டும் என்று Zhang Jiao வேண்டுகோள் விடுத்தார். உணவு வகைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு மீதான பரிசோதனை அமைப்புகளை வளர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார்.

தற்போது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டின் டிசம்பர் திங்களில், பரிசீலனைக்காக சீனச் சட்டமியற்றல் வாரியத்துக்கு இவ்வரைவுத்திருத்தம் ஒப்படைக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.


1  2  3