• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-12 17:04:11    
ஆகாயத்தில் வல்லுநர் அப்லேதி மேச்சுன்

cri

டாவாஜ் என்பது சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஒரு பண்டைய வித்தையாகும். அதாவது, "ஆகாயத்தில் கயிற்றில் நடப்பது" என கூறுகின்றோம். ஆபத்தானது கடினமானது என்ற காரணத்தினால், டாவாஜ், "துணிவுமிக்கவர்களின் வித்தை" என விகுர் இனத்தவர்கள் கூறுகின்றனர். உள்ளூரில் டாவாஜ் கலைஞர்களில் தலைசிறந்தவர், அப்லேதி மேச்சுன் ஆவார். தரையிலிருந்து 28 மீட்டர் உயரமான இருப்பு நூல் கயிற்றில் 38 நாட்களை ஆடிப்பாடிய வண்ணம் கழித்தார் இவர். ஆகாயத்தில் கயிறில் நடக்கும் 7 நிகழ்ச்சிகள் என்ற சாதனை செய்த ஜிநிசூ உலக சாதனையை அவரது செயல் முறியடித்தது. இன்றைய நிகழ்ச்சியில், அப்லேதி மேச்சுன் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

முதல் சந்திப்பில், எமது செய்தியாளர், டாவாஜ் பற்றியும் சிங்கியாங்கின் ஆடல் பாடல் பற்றியும் கூறிய போது, 35 வயதான மேச்சுன், சிறப்பு உற்சாகம் அடைந்தார். அன்றி, "லுங்வாப்" என்னும் விகுர் இன இசைக்கருவியை இசைத்து, "முகார்மு" என்னும் நாட்டுப்புறப்பாட்டு ஒன்றை பாடினார். இவ்விசைக் கருவி, விகுர் இனத்தவர்களிடையே பழக்கத்தில் உள்ள இசைக்கருவியே. இசைக்கையில் கேட்பதற்கு இனிமையானது இந்த இசைக்கருவி.

டாவாஜ், அதாவது "ஆகாயத்தில் கயிற்றில் நடப்பது" போன்ற சிங்கியாங்கின் ஒரு வித்தை, சீனாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகால வரலாறுடையது. பின்னர், போர் குழப்ப காரணமாக, மன்றந்து விடும் விளிம்பில் இருந்தது. அதிஷ்டவசமாக சிங்கியாங்கிலுள்ள ஒரு விகுர் இன குடும்பத்தால் கையேற்றப்பட்டு வெளிக்கொணரப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சிங்கியாங்கின் டாவாஜ் கலைஞர்களின் முயற்சியுடன், இந்த பண்டைக்கால நாட்டுப்புற கலை, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அரங்கேற்றம் செய்வோர், காப்புறுதிக்கான கயிறு கட்டாமல், தரையிலிருந்து பத்துக்கும் அதிகமான மீட்டர் உயரமுடைய அல்லது சில பத்து மீட்டர் உயரமுடைய, ஆகாயத்தில் கட்டப்பட்ட கயிற்றில் கையில் நீண்ட தடியைப்பற்றிக் கொண்டு, பல கடினமான செயல்களை செய்து காட்டுவது, அதன் வசீகரமாகும்.

1 2 3