
கடந்த ஆண்டு, சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசம், அதன் 50வது ஆண்டு நிறைவை வரவேற்றது. இதற்கிடையில், மேச்சுன், தமது ஊருக்கு மிகச் சிறப்பான அன்பளிப்பு வழங்கினார். அவர், உலக டாவாஜ் பதிவை முறியடித்தார். அவர் கூறியதாவது:
"வித்தை குழுவின் ஆதரவுடன், 7 ஆண்டுகாலம் பயிற்சி செய்து, டாவாஜ் கலையைக் கொண்டு, 7 உலக சாதனைகளை முறியடிப்பதென்ற கனவை நனவாக்கினேன். தன்னாட்சிப் பிரதேசத்தின் 50வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்கு ஒரு அன்பளிப்பாக இதை வழங்கினேன்" என்றார்.
இந்த அன்பளிப்புக்காக, மேச்சுன், ஆகாயத்தில் 38 நாட்கள் வாழ்ந்தார். பகலில், தரையிலிருந்து 28 மீட்டர் உயரமுடைய உருக்கு கயிற்றில் ஆடிப்பாடி இருந்தார். இரவில் கயிறின் ஒரு முனையில் அமைந்துள்ள ஒரு சிறிய அறையில் ஓய்வு பெற்றார்.

சிங்கியாங் வித்தை கலைஞர்கள் சங்கத்தின் துணை தலைவர் யு கிங் யூன் அப்போது மேசுனின் அரங்கேற்றத்தைக் கண்டு ரசித்தார். அதை நினைவுகூர்ந்த போது பேசுகையில், அந்நாட்களில் மேச்சுன், நாள்தோறும் உருக்கு கயிறில் 6 மணிக்கு மேல் நடக்க வேண்டும். அன்றி "லுங்வாப்" என்றும் இசைக் கருவியை இசைத்தார். சில வேளைகளில், உருக்கு கயிறு, பெரிய காற்றோடு ஆடிய நிலையிலும், தமது இரு கண்களையும் துணியால் முடிய வைத்து, நடந்தார். அவ்வப்போது விகுர் இன நடனமாடினார் என்று கூறினார். அளவுக்கு மீறிய அதிர்ச்சி தரும் அரங்கேற்றத்தினால், ரசிகர்கள், அடிக்கடி, கவலைப்பட்டு கதிகலங்கும் குரல் எழுப்பினர். சிலர், அஞ்சி கண்களையும் மூடினர் என்றும் அவர் சொன்னார்.
"சில வேளையில், இரவாகி, கைகளின் ஐந்து விரல்களையும் தெளிவாக பார்க்க முடியாது. அன்றி, தரையிலிருந்து சில பத்து மீட்டர் உயரத்தில் உருக்கு கயிற்றில், எந்த வெளிச்சமும் இல்லாமல், எந்த காப்பீடும் இல்லாத நிலையில் மேச்சுன் டாவாஜ் கலை அரங்கேற்றத்தை செய்து காட்டினார். இது மிகவும் ஆபத்து" என்று அவர் சொன்னார்.
உலக சாதனையை முறியடித்தல் மிகவும் கடினம் என்ற போதிலும், இதை நினைவுகூடும் போதெல்லாம், மேச்சுன், பெரிதும் பெருமை கொள்கிறார். தாம் முன்னேற்றமடைந்துள்ளதை உணர்ந்து கொண்ட போது, அவர் "லுங்வாப்" இசை கருவியை இசைத்த வண்ணம், தாம் விரும்பும் விகுர் இனப்பாடலை பாடுவார். 1 2 3
|