• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-12 17:04:11    
ஆகாயத்தில் வல்லுநர் அப்லேதி மேச்சுன்

cri

தாம், சிறு வயதிலிருந்தே துணிச்சலான விளையாட்டுக்களை விரும்புவதாக மேச்சுன் சொன்னார். 7வது வயதில், தம் தகப்பனாருடன் மாவட்ட நகருக்குப் போய், டாவாஜ் கலைஞர்களின் அரங்கேற்றத்தைப் பார்த்து ரசித்தார். அப்போது, இக்கலைஞர்களின் துணிவினால் அவர் மனமுழுகினார். அதே வேளையில், டாவாஜ் கலைஞராக வேண்டும் என்ற வண்ணம் அவரது மனதில் உருவாயிற்று.

மேசுனின் 17வது வயதில் இக்கனவு நனவாகியது. வேவ்வேறான வித்தைகளைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். பின்னர், முதிய டாவாஜ் கலைஞரின் வழிக்காட்டலில், அப்லேதி மேச்சுன் கலை வாழ்வினைத் துவக்கினார். இந்த பழம்பெரு வித்தையை வெளிக்கொணர வேண்டும் என்பது, அவரது விருப்பமாகும்.

இக்கனவை நனவாக்க, மேச்சுன், பயிற்சி செய்து அரங்கேற்றி வந்துள்ளார். எவ்வளவு ஆபத்து, எவ்வளவு கடினம் என்று பொருட்படுத்தாமல், தமது முயற்சியை கையிடமால் தமது நுட்பத்தை உயர்த்திக்கொண்டே வருகின்றார்.

7 ஆண்டுகளுக்கு முன், சிங்கியாங்கின் உருமுச்சி நகரின் ஒரு பூங்காவில் டாவாஜ் அரங்கேற்றிய போது, தற்செயலாக தன்னை அறியாமல், உயர்ந்த ஆகாயத்திலிருந்து தரையில் விழுந்து கடும் காயமுற்று, மயக்கமடைந்தார். மருத்துவரின் முழுமூச்சான முதல் உதவியுடன், அவர் மரண விளிம்பைத் தாண்டி உயிர் பெற்றார். ஆனால், என்றுமே அவரால் டாவாஜ் செய்ய முடியாது என மருத்துவர் கூறினார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின், அப்லேதி மேச்சுன் மனம்தளரவில்லை. தனது டாவாஜ் கலை வாழ்வு இவ்வளவு விரைவாக முடிவடையக்கூடாது. டாவாஜ் அணியில் மீண்டும் சேர வேண்டும் என்ற எண்ணம், மென்மேலும் வலுவாகியது.

"எனது கலை எவ்வளவு தலைசிறந்ததாக அமைந்தாலும், நான் இதிலிருந்து ஓய்வு பெறும் நாள் வரத் தான் இருக்கும். இக்கலையிலிருந்து விலகி செல்வதற்கு முன் உலக கின்னஸ் சாதனைகள் பலவற்றை முறியடித்து, தமது குழு சாதனை செய்ய வேண்டும். சீன நாட்டுக்கு புகழ் வென்றெடுக்க வேண்டும்" என்றார்.

அப்போது, மேசுகன், உலக சாதனையை முறியடிப்பதை, தமது போராட்ட குறிக்கோளாக மறைமுகமாக வைத்துக் கொண்டார். எனவே, தம் மனைவிக்குத் தெரிவிக்காமல், பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஓராண்டுகால பயிற்சி மூலம், உருக்கு கயிறில் விரும்பியவாறு பல்வகை செயல்பாடுகளைச் செய்து காட்ட அவரால் முடிந்தது. சகாக்கள் மகிழ்ச்சியடைந்து, மேச்சுன், ஒரு அற்புதம் என்று கருத்து தெரிவித்தனர்.

1 2 3