 கு சியு லியன் அம்மையார், சீனாவில் அதிகாரச் செல்வாக்கு மிகுந்த பெண்மணி என சொல்லலாம். காரணம், ஒன்று, சீனத் தேசிய மக்கள் பேரவை, சீன நாட்டின் அதியுயர் அதிகார நிறுவனமாகும். கு சியு லியன், அதன் நிரந்தர கமிட்டியின் துணை தலைவராவார். இரண்டு, அனைத்து சீன மகளிர் சம்மேளனம், சீனாவின் பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த மகளிர் கூட்டாக உருவாக்கிய சமூக அமைப்பாகும். கு சியு லியன், இந்த அமைப்பின் தலைவராவார்.
வசந்தகாலத்தில் இனிமையான ஒரு மாலையில், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் உபசரிப்பு அறை ஒன்றில், கு சியு லியன் அம்மையார் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.
20க்கு அதிகமான ஆண்டுகளுக்கு முன் ஜியாங் சு மாநிலத்தின் தலைவராகவும், 10க்கு அதிகமான ஆண்டுகளுக்கு முன் வேதியியல் தொழிற்துறை அமைச்சராகவும் அவர் பதவியேற்றார். புதிய நூற்றாண்டில் சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவராகவும், அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் தலைவராகவும் அவர் பணி புரிகிறார். தற்போது, மகளிர் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பதில் அவர் முழுமனதுடன் ஈடுபடுகிறார். சந்திப்பின் போது, சீனாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் பற்றிய பணி பற்றி அவர் செய்தியாளரிடம் கூறியதாவது—
"மகளிர் பிரச்சினைக்கு நமது அரசு முக்கியத்துவம் தந்து, பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்ட ரீதியிலும், கொள்கை ரீதியிலும், அமைப்பு மற்றும் செயல்முறை மூலம், ஆண் பெண் சமத்துவத்துக்கும், மகளிர் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் தரப்பட்டு, பயன் பெறப்பட்டுள்ளது" என்றார் அவர்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில், மகளிர் உரிமை மற்றும் நலனுக்கான பாதுகாப்பு சட்டத்தை மையமாகக் கொண்ட, மகளிர் உரிமையையும் நலனையும் பாதுகாத்து, மகளிர் மேம்பாட்டை ஊக்குவிக்கும் சட்ட அமைப்பு முறை சீனாவில் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் 90 விழுக்காட்டுக்கு மேலான நிர்வாக பிரதேசங்களிலும், நகரங்களிலும், மாவட்டங்களிலும், மகளிர் மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. மகளிர் வளர்ச்சி திட்டத்தையும் பல்வேறு நிலை அரசாங்கங்கள் தீட்டியுள்ளன என்று அவர் கூறினார். இந்த வளர்ச்சியினால், வளரும் நாடுகளில், சீனாவின் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் முன்னணியில் உள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, இது சிறப்பானது.
1 2 3
|