
தாய் நீர் சேமிப்பு குள திட்டப்பணி, கிராமப்புற மகளிருக்கு மருத்துவ சேவை மற்றும் மருந்து வழங்கும் தாய்மாரின் உடல் நலத்துக்கான விரைவு வண்டி திட்டம், வறிய பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி திட்டம், வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் வயதான பெண் குழந்தைகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் ஆகியவை, கு சியு லியன் அம்மையார் அனைத்து சீன மகளிர் சம்மேளத்தின் பொறுப்பாளராக பணியேற்ற பின், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு உண்மையான பயன்களை தந்துள்ளன. அடி மட்ட பொது மக்கள் மனம் உருகச் செய்யப்படுகின்றனர்.
மகளிர் லட்சியத்தின் வளர்ச்சிக்காக, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 10க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அரசு நிறுவனங்களுடனும், அரசு சாரா அமைப்புகளுடனும், அனைத்து சீன மகளிர் சம்மேளனம் கு சியு லியன் தலைமையில், ஒத்துழைப்பு திட்டங்கள் மேற்கொண்டுள்ளது. 1000க்கும் அதிகமான இந்தத் திட்டங்கள், வறுமை ஒழிப்பு, கல்வி, உடல் நலம், வேலை வாய்ப்பு, மகளிர் உரிமை மற்றும் நலன் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடையவை.
நாள் முழுவதும் மகளிர் முன்னேற்றத்துக்காக கு சியு லியன் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகிறார். குடும்பத்தில், அவரின் கணவர் கனிவுடன் அவரை பராமரித்து வருகிறார். கணித நிபுணரான கணவர், தனது பணிகளுக்கு இடையிலும், மனைவி கு சியு லியனின் பணிக்கு ஆதரவு அளித்து வருகிறார். கணவர் பற்றி குறிப்பிடுகையில், கு சியு லியன் புன் சிரிப்புடன் செய்தியாளரிடம் கூறியதாவது—
"என் கணவர் என்னை விட நன்றாக சமைக்கிறார். அவரை எங்கள் குடும்பத்தில் சிறந்த சமையல்காரர் என நான் போற்றுகின்றேன். இதனால் நான் சமைப்பது குறைவுதான்" என்றார் அவர். 1 2 3
|