• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-17 16:33:54    
சீனாவில் அதிகாரச் செல்வாக்கு மிகுந்த கு சியு லியன் அம்மையார்

cri

மகளிர் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட அமைப்பு முறையை வளர்க்க, கு சியு லியன் அம்மையார், அடிக்கடி உள்ளூர்களுக்குச் சென்று கள ஆய்வு செய்கிறார். இது குறித்து, மக்கள் பேரவை பிரதிநிதி மொ வென் சியு அம்மையார் கூறியதாவது—

"மகளிர் உரிமை பேணிகாப்பதில் அவர் நெடுநோக்குடன் முன்னணியில் இருக்கிறார். எடுத்துக்காட்டாக, மகளிர் உரிமை மற்றும் நலன் பாதுகாப்பு சட்டத்தின் திருத்தம், 2002ஆம் ஆண்டில்தான் துவங்கியது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின், மகளிரின் உரிமை மற்றும் நலனை பாதுகாக்கும் நிலை பற்றி அறிந்து கொள்ள, அவர் அடி மட்ட இடங்களுக்குச் சென்று கள ஆய்வு செய்தார். இச்சட்டத்தை திருத்தும் அடிப்படை கோட்பாட்டையும் வழிமுறையையும் உறுதிப்படுத்தினார்" என்றார் அவர்.

வலுவான பண்பு உடைய கு சியு லியன், எப்போதுமே மற்றவரை உதவிக்கென எதிர்பார்த்ததில்லை. ஒரே ஒரு முறை, தாய் நீர் சேமிப்பு குளம் திட்டப்பணிக்குப் பணம் திரட்டுவதற்காக மட்டுமே இவர் உதவி நாடினார். 2000ஆம் ஆண்டில் அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தினால் துவக்கப்பட்ட திட்டம், சீனாவின் வறட்சியான மேற்கு பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு மழை நீரை சேமிக்கும் குளம் கட்டும் அறநிலை திட்டப்பணியாகும். அந்தப் பகுதிகளின் நீர் பற்றாக்குறையினால், பெரும்பாலான ஆண்கள் வெளியூருக்குச் சென்று வேலை செய்கின்றனர். மகளிர் மற்றும் குழந்தைகள் வீட்டிலேயே உள்ளனர். சுகாதாரம் உள்ளிட்ட வாழ்க்கை நிலை மிகவும் மோசமாக உள்ளது. சுமார் 1000 யுவான் நன்கொடை செய்து, ஒரு நீர் சேமிப்பு குளம் கட்டப்பட்டு, 4 பேர் கொண்ட குடும்பத்தின் வாழ்க்கை மற்றும் உற்பத்திக்குத் தேவையான நீர் பயன்பாடு நிறைவு செய்யப்படும்.

இந்தத் திட்டப்பணிக்குப் பணம் திரட்டிய காலத்தில், ஒரு ரசாயன பொருட்காட்சி பெய்ஜிங்கில் நடைபெற்றது. வேதியியல் தொழிற்துறையின் முன்னாள் அமைச்சரான கு சியு லியன் இதில் கலந்து கொண்டார். அப்போது, "மேற்கு பகுதியில் நீர் குறைவான இடங்களில் நீர் சேமிப்பு குளம் கட்டுவதற்காக, உங்களிடம் பண உதவி கேட்கின்றேன். ஆதரவளியுங்கள்" என்று அவர் சில நிறுவனங்களின் பொறுப்பாளர்களிடம் கூறினார். மனம் உருகச் செய்யப்பட்ட அந்த பொறுப்பாளர்கள், "முன்னாள் அமைச்சரே, நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் ஆதரவளிக்கின்றோம்" என்று தெரிவித்தனர்.

1  2  3