• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-20 15:20:57    
நானும் சீன வானொலி நிலையமும்

cri

வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். தி. கலையரசி கிளீட்டஸ் இருவரும் உங்களுக்கு இவ்வாண்டு சீன வானொலி நிலையத்தின் தலைமையிலான பொது அறிவு போட்டி, தமிழ் பிரிவின் தலைமையிலான பொது அறிவு போட்டிகள் ஆகியவை பற்றி விளக்கி கூறுகின்றோம்.

கிளீட்டஸ். ....போன முறை நாம் இருவரும் தமிழ் பிரிவின் இவ்வாண்டுக்கான இரண்டு பொது அறிவு போட்டிகள் நடத்துவது பற்றிய தகவல் விபரமாக நேயர்களுக்கு சொல்லி இருந்தோம். இன்றைய நிகழ்ச்சியில் சென்ற முறை விளக்கிய தகவலின் சில பகுதி நேயர்களுக்கு மீண்டு சொல்வது தவிர வேறு ஏதாவது புதிய தகவல் சொல்ல வேண்டுமா?

கலை.......சொல்ல வேண்டும். மே திங்கள் 22ம் நாள் முதல் சீன வானொலி நிலையத்தின் தலைமையில் "நானும் சீன வானொலி நிலையமும்"என்னும் பொது அறிவு போட்டி துவங்கும்.

கிளீட்டஸ்......எனக்கு புரிந்தது. இந்த பொது அறிவு போட்டியில் எத்தனை கட்டுரைகள் உள்ளன?

கலை.....நான்கு கட்டுரைகள் உள்ளன.

கிளீட்டஸ்....அப்படியிருந்தால் 8 வினாக்களும் நான்கு கட்டுரைகளில் இருக்க வேண்டும்.

கலை......ஆமாம். 8 வினாக்கள் இருக்கின்ற வினாத் தாள்கள் மே 16ம் நாளன்று நேயர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. வினாத்தாள்கள் நேயர்களிடம் வந்துசேர்ந்த பின், இந்த நான்கு கட்டுரைகள் 22ம் நாள் ஒலிபரப்பபடும்.

1  2  3