கிளீட்டஸ்.......இப்போது இந்த நான்கு கட்டுரை பற்றி கொஞ்சம் தகவல் சொல்லலாமா?
கலை.....சொல்லலாம். முதல் கட்டுரையில் சீன வானொலி வரலாறு பற்றி முக்கியமாக குறிப்பிடப்படுகின்றது.
கிளீட்டஸ்.....இரண்டாவது கட்டுரையில் அதன் ஒலிபரப்பு வளர்ச்சி பற்றி கூறப்படுகின்றது.
கலை......மூன்றாவது கட்டுரையில் எதிர்காலம் பற்றி குறிப்பிடப்படுகின்றது.
கிளீட்டஸ்......நான்காவது கட்டுரையில் நேயர்களுக்கும் சீன வானொலி நிலையத்திற்குமிடையிலான நெருங்கிய தொடர்பு பற்றி விவரிக்கப்படுகின்றது.
கிளீட்டஸ்.......கலை ஏற்கனவேயுள்ள அனுபவங்களின் படி தான் நாம் பொது அறிவு போட்டி நடத்துகின்றோம். அல்லவா?
கலை......ஆமாம். எப்படி பொது அறிவு போட்டியில் பங்கெடுப்பது என்பது பற்றி பழைய நேயர்களுக்கு அனுபவம் உண்டு. புதிய நேயர்களுக்கு அவ்வளவு அனுபவம் கிடைத்திருக்காது என்று கருதுகின்றேன்.
கிளீட்டஸ்.....அப்படியிருந்தால் கொஞ்சம் கூடுதலான தகவல் சொலுங்கள்.
கலை.....சொல்கின்றேன். முதலில் நேயர்கள் உன்னிப்பாக இந்த நான்கு கட்டுரைகளை கேட்க வேண்டும். பொருளாதார வசதியுள்ள நேயர்கள் பதிவுக் கருவி மூலம் இந்த நான்கு கட்டுரைகளை பதிவு செய்யலாம். இல்லை என்றால் ஒவ்வொரு கட்டுரை ஒலிபரப்புவதற்கு முன் இரண்டு வினாக்கள் முதலில் ஒலிபரப்பபடும்.
1 2 3
|