• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-20 15:20:57    
நானும் சீன வானொலி நிலையமும்

cri

கிளீட்டஸ்..... இது புதிய வழி முறை.

கலை.....ஆமாம். கட்டுரை கேட்பதற்கு முன் இந்த கட்டுரையில் வினாக்கள் தெரிந்த முறையில் முக்கிய அம்சங்களை கண்டுபிடித்து விடை பெறுவது எளிதானது.

கிளீட்டஸ்.......சரி, விடைகளை கண்டுபிடிக்க நான்கு நாட்கள் தேவை.

கலை.....ஆமாம். ஒவ்வொரு நாளுக்கு ஒரு கட்டுரை என்ற முறையில் பொது அறிவு போட்டியுடன் தொடர்புடைய நான்கு கட்டுரைகள் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்புவோம். ஆகவே நேயர்கள் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக கேட்டால் 8 வினாட்களுக்கு விடை அளிப்பதில் பிரச்சினை இருக்காது.

கிளீட்டஸ்.......சரி. வினாக்களை நிரப்பிய விடைத்தாள் எப்படி தமிழ்ப் பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.

கலை.....முதலில் வினாக்களில் விடைகளை அளிக்கும் போது ஒவ்வொரு வினாவுக்கு 3 விடை தேர்வு வாய்ப்பு உண்டு. இவற்றிலிருந்து ஒரு சரியான விடையின் பக்கத்தில் உள்ள வெற்றிடத்தில் "√"என்று சரி குறிப்பு போட்டால் போதும். விடைத்தாளை கத்தரிக்காமல் மொத்தமாக எங்களுக்கு அனுப்ப வேண்டும்.

கிளீட்டஸ்.......இந்த வழி முறையும் புதியது. நேயர்கள் சரி குறிப்பு போட்ட பின் விடைகளை அளிக்கும் போது ஒவ்வொரு வினாவுக்கு 3 விடை தேர்வு வாய்ப்பு உண்டு. இவற்றிலிருந்து ஒரு சரியான விடையின பக்கத்தில் உள்ள வெற்றிடத்தில் "√"என்று சரி குறிப்பு போட்டால் போதும். விடைத்தாளை கத்தரிக்காமல் மொத்தமாக எங்களுக்கு அனுப்ப வேண்டும். நேயர் அட்டை எண், முழுமையான முகவரி ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டும் அல்லவா?

கலை.......ஆமாம். நேயர் அட்டை எண், முழுமையான முகவரி ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டும். ஒவ்வொரு நேயரின் தகவல் அவருக்கான பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

கிளீட்டஸ்.......சரி இது எல்லாம் முடித்து விட்ட பின் என்ன செய்ய வேண்டும்?

கலை.....அப்போது சீக்கிரமாக விடைகள் கொண்ட விடைதாள்களை எங்களுக்கு அனுப்ப வேண்டும். அனுப்புவதற்கு முன் தெளிவாக விடைத்தாள் கொண்ட இலவச கடித உறையின் மேல் வலது பக்கத்தில் "நானும் வானொலியும்"என்ற குறிப்பு எழுத வேண்டும். அதேவேளையில் விடைதாள்களின் எண்ணிக்கையும் எழுத வேண்டும்.

கிளீட்டஸ்.....நேயர்களே. "நானும் சீன வானொலி நிலையமும்"என்னும் பொது அறிவு போட்டி நடத்துவது பற்றிய தகவலை கேட்டு புரிந்து கொண்டீர்களா?

கலை......நான்கு கட்டுரைகளை மே திங்கள் 22ம் நாள் முதல் ஒலிபரப்ப துவங்குவோம். கேட்க தவறாதீர்கள்.

கிளீட்டஸ்....."நானும் சீன வானொலி நிலையமும்"என்னும் பொது அறிவு போட்டி மே திங்கள் 22ம் நாள் துங்கும். அப்படியிருந்தால் எப்போது நிறைவடையும்.

கலை.......செம்படெம்பர் 30ம் நாளுக்குள் விடைதாள்கள் முழுவதையும் அனுப்ப வேண்டும். இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.


1  2  3