
பாடல் அரங்கு என்பது, தென் மேற்கு சீனாவின் குவாங் சி சுவாங் இனத்தன்னாட்சி பிரதேசத்தின் நாட்டுப்புற பாரம்பரிய நிகழ்ச்சியாகும். அன்றி, சுவாங் இன தனித்தன்மை வாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். பாடல் அரங்கில், நாட்டுப்புற பாடல்கள், முக்கியமாக இடம்பெறுகின்றன. அதே வேளையில், ஏராளமான பிற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இன்றைய நிகழ்ச்சியில், சுவாங் இனத்தின் வூ மிங் மாவட்டத்தில் உள்ள பாடல் அரங்கை நேரில் உணர்ந்து கொள்வோம்.
குவாங் சி சுவாங் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் மற்றும் மத்திய பகுதியில் அமைந்துள்ள இம்மாவட்டம், சுவாங் இனப்பண்பாடு தோன்றிய இடங்களில் ஒன்றாகும். நீண்டகால வரலாற்றுப் போக்கில், அடர்த்தியான சுவாங் இன தனித்தன்மை உடைய பாடல் அரங்குப் பண்பாடு, வூ மிங் மாவட்டத்தில் உருவாயிற்று.
வூ மிங் மாவட்டத்தின் சியாங் சன் பூங்கா சதுக்கத்தில், சுமார் நூறு சுவாங் இன இளைஞர், இளம்பெண்கள், அழகான நீல தேசிய இன ஆடைகளை அணிந்து மூவர் அல்லது ஐவர் குழுவாகி, ஒருவருடன் ஒருவர் நாட்டுப்புறப்பாடலைப் பாடுகின்றனர். பாட்டொலி அங்கும் இங்குமாக எழும்ப, சதுக்கம் பாட்டுக் கடலாகியது.
சுவாங் இனத்தவர்களிடையே இவ்வளவு அதிகமான நாட்டுப்புறப்பாடகர்கள் இருப்பதற்குக் காரணம் என்ன? வூ மிங் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாங் இன விவசாயி சு சியே ஜிங் கூறியதாவது:சாதாரண வாழ்க்கையில், சுவாங் இனத்தவர்கள், பாடிக்கொண்டே நல்ல குரல் வளம் பெற்றனர். அவர்கள் வழக்கமாக நாட்டுப்புறப்பாடல்கள் மூலம் தத்தமது விருப்பத்தையும் உணர்ச்சியையும் தெரிவிக்கின்றனர்.
"சுவாங் இன முதியோர்கள், பகலில் உழைத்து களைப்படைந்தனர். எனவே, அவர்கள் தமது விருப்பங்களை, நாட்டுப்புறப்பாடல் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இளைஞர்களும் அப்படியே. காதலர்களும் நாட்டுப் புறப்பாடல் போன்ற வடிவத்தில் காதலை வெளிப்படுத்துகின்றனர். குழந்தைகளும் சுவாங் இனம் பயன்படுத்தும் குழந்தை வரிகளைக் கொண்டு மகிழ்ச்சி, கோபம், சோகம் ஆனந்தம் ஆகியவற்றை வெளிக்காட்டுகின்றனர்" என்றார், அவர்.
1 2 3
|