
சீன பாரம்பரிய நாட்காட்டியின் படி, மார்ச் மூன்றாம் நாள் முதல் மே ஐந்தாம் நாள் வரை, அதாவது, மார்ச் திங்கள் முதல் ஜுன் திங்கள் வரை வூ மிங் மாவட்டத்தில் பெரிய மற்றும் சிறிய பாடல் அரங்குகள் நடைபெறுகின்றன. இந்நேரத்தில் பாடல் அரங்குகள் நடைபெறுவது எதற்காக? வூ மிங் மாவட்டத்தின் பாட்டு மன்னர் என பாராட்டப்பட்டு வரும் மங் சுயே சன், செய்தியாளரிடம் கூறியதாவது:
"ஆண்டுதோறும் மே ஐந்தாம் நாள், உள்ளூர் மக்கள் வயலில் விளையும் புற்களைக் களைக்க வேண்டும். அப்போது முதல் பாடுவதற்கு நேரம் இல்லை. இலையுதிர்காலம் அறுவடை செய்த பின் தான் பாட துவங்குவர்."
பாடல் அரங்கு உருவெடுத்தது குறித்து இந்த பாட்டு மன்னர் அழகான கதை ஒன்றை சொன்னார். வெகு காலத்துக்கு முன்பே, சுவாங் இன பழம்பெரு பாடகரின் மகள் மிகவும் அழகி. நாட்டுப்புறப்பாடலில் தேர்ச்சி பெற்றவர். எனவே, சிறந்த பாடகர் ஒருவரை தமது மணமகனாக்க விரும்பினார். ஆதலால், பல்வேறு இடங்களின் இளம் பாடகர்கள் பாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இப்பெணை மணம் செய்ய வருகை தந்தனர். இந்த பாட்டுப் போட்டியின் அடிப்படையில், பாடல் அரங்கு தொடங்கியது.
பாடல் அரங்கில், நாட்டுப்புறப்பாடலைப் பாடுவது, அதிமுக்கியமானது. தவிர, சுவாங் இன இளைஞர், இளம்பெண்கள் பலர், மூங்கில் தடி நடனம் உள்ளிட்ட, தேசிய இன சிறப்பியல்புடைய நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றனர்.
இவை போக, சில சுவாங் இனத்தவர்களின் வீட்டில் வெவ்வேறான நடவடிக்கைகள் நடைபெற்றன. எடுத்துக்காட்டாக, சுவையான உணவுப் பொருட்களை தயாரித்து, நெருங்கிய நண்பர்களுடன் தரமான மது அருந்தி, ருசியான உணவுகளை உட்கொள்கின்றனர். மேலே கூறப்பட்ட வூ மிங் மாவட்ட விவசாயி சு சியே ஜிங் செய்தியாளரிடம் அறிமுகப்படுத்தினர். அவர் கூறியதாவது:
"எங்கள் தேசிய இனத்தின் பழக்க வழக்கங்களின் படி, ஒவ்வொரு குடும்பமும் ஐந்து நிற பசை அரிசி சோறு தயாரிக்க வேண்டும். அன்றி, கோழி-வாத்துக்களை கொன்று கறிகளை சமைக்க வேண்டும். இப்போதும், சுவாங் இன மக்கள், முந்தைய சிறந்த பாரம்பரியங்களை நிலைநிறுத்தியுள்ளனர்" என்றார்.
1 2 3
|