• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-19 09:03:54    
குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் பாடல் அரங்கு

cri

சுவையான உணவுகள் தவிர, பாடல் அரங்கில், தரமான மதுவும் இன்றியமையாதது. பாட்டு மன்னர் மங் சுயே சன், செய்தியாளரிடம் கூறியதாவது:

"பாடல் அரங்கு நாட்களில், அனைவரும் பாடுவார்கள். மது குடிப்பார்கள். அதிகமான விருந்தினர்கள் வந்தால், அக்குடும்பத்துக்கு மிகப் புகழ். வருவோர் அனைவருக்கும் மது உண்டு. மது அருந்திய பின், பாடுவார்கள். விடியற்காலை வரை இது தொடரும்" என்றார்.

இப்போது, சுவாங் இன மக்கள் சிறந்த வாழ்வை நடத்துகின்றனர். வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளது. எனவே, பாடல் அரங்குக்கு வருகை தருவோரின் உற்சாகமும் ஒங்கி வளர்கின்றது. உள்ளூர் அரசு, பாடல் அரங்கு நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் கவனம் செலுத்தி வருகின்றது என்பது, அவர்களுக்கு மேலும் மகிழ்வினை ஏற்படுத்துகின்றது. சுவாங் இன விவசாயி சு சியே ஜிங் பேசுகையில்,

"முன்னர் நாட்டுப்புறப்பாடல் பாடும் மேடை, கிராமத்தில் இயல்பாக உருவாயிற்று. இப்போது, இம்மேடை, அரசால் கட்டப்படுகின்றது. எனவே எட்டுத் திசைகளிலிருந்தும் மக்கள் வருகின்றனர்" என்றார்.

கடந்த சில ஆண்டுகளில், வூ மிங் மாவட்டத்தின் பாடல் அரங்கின் செல்வாக்கு மேன்மேலும் வரிவடைந்து வருகின்றது. பல்வேறு வட்டங்களிலிருந்து பலர் வந்து, இப்பாடல் அரங்கில் கலந்து கொள்கின்றனர். அன்றி, நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள், ஆயிரக்கணக்கான மைல்களைப் பொருட்படுத்தாமல், வூ மிங் மாவட்டத்துக்கு வருகை தந்து, இவ்வரங்கைப் பார்த்து, சுவாங் இனத்து பாடல் அரங்கு பண்பாட்டை நேரில் உணர்ந்து கொள்கின்றனர். குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வூ மிங் மாவட்ட கட்சி கமிட்டியின் செயலாளர் சு செள யுன் கூறியதாவது:

"நாட்டுப்புறப்பாடலைப் பாடுவதும், பாடல் அரங்கு நடத்துவதும் வூ மிங் மாவட்டத்தின், எங்கள் சுவாங் இனத்தின் ஒரு தலைசிறந்த பண்பாட்டுப் பாரம்பரியமாகும். அரசின் ஏற்பாட்டில், பாடல் அரங்கு படிப்படியாக மாவட்டத்தைத் தாண்டி செல்வாக்கு பரவுகின்றது. கடந்த சில ஆண்டுகளில், பாடல் அரங்கினை நேரில் ரசித்து மகிழ, ஹாங்காங், மக்கெள, தைவான் விருந்தினர்களும் நாட்டின் பல்வேறு இடத்து விருந்தினர்களும் அதிகமாக வந்திருக்கின்றார்கள்" என்றார்.


1  2  3