• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-26 17:15:49    
சீனாவில், சிறுபான்மை தேசிய இன தொல் பொருள் பாதுகாப்பு

cri

சுவாங் இனத்துக்குரிய பின்னல் துணி

இவ்வாண்டு 40 வயதுக்கு மேலான வூ வே ப்ன், தென் மேற்கு சீனாவின் குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அருங்காட்சியகத்தின் துணை தலைவர். இங்கு வாழும் ஒரு கோடியே 50 லட்சம் சுவாங் இனத்தவர்களில் அவரும் ஒருவராவார். அவரது ஊர், குவாங் சியின் டு அன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தனது இனம் பற்றிக் குறிப்பிட்ட போது, சுவாங் இனத்துக்குரிய பின்னல் துணி, நாட்டுப்புறப்பாடல் மற்றும் செம்பு முரசு பற்றி அவர் அறிமுகப்படுத்தி மகிழ்கிறார். இப்பொருட்கள் தான், சுவாங் இனத்தின் வரலாறும் பாரம்பரியங்களும் தலைமுறை தலைமுறையாக பரவி வருவதற்குத் துணை புரிகின்றன என்றார்.

வூ வே ப்ன் கூறிய பின்னல் துணி, பட்டு நூலையும் பருத்தி நூலையும் கலந்து பின்னப்பட்ட ஒரு வர்ண கைவினைத் துணிப் பொருளாகும். சுவாங் இன மக்களின் பாரம்பரிய வாழ்க்கையில், சாதாரண குடும்பத்தினர்கள் பயன்படுத்தும் போர்வைகள், இத்தகைய பின்னல் துணியால் தயாரிக்கப்பட்டவையாகும். பெண்கள் திருமணம் செய்யும் போது, இப்பின்னல் துணி இன்றியமையாதப் பொருளாகும். அவர் கூறியதாவது:

"எங்கள் சுவாங் இனப் பிரதேசத்தில், பின்னல் துணி மூலம் கிடைக்கும் வருமானம், முழு குடும்ப வாழ்க்கைக்கு போதுமானது. குடும்பப் பொருளாதாரத்தில் இவ்வருமானம் முக்கிய இடம் வகிக்கின்றது. தவிர, வாழ்க்கை பற்றிய சுவாங் இனத்தவர்களின் புரிந்துணர்வையும் விருப்பத்தையும் இது பிரதிபலிக்கின்றது" என்றார்.

பின்னல் துணியை பின்னும் சுவாங் இன பெண்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே, சுவாங் இன மக்கள், சுவாங் கிங் என்னும் இப்பின்னல் துணியை பின்ன முடிந்தது. பொருளாதார வளர்ச்சியுடன், குறைவான விலையும் சிறந்த தரமும் உடைய நவீன துணிப் பொருட்கள், இந்த பாரம்பரிய கைவினைக்கு மோதலாக அமைகின்றன. பாரம்பரிய கைவினை இழக்காமல் தவிர்க்கும் வகையில், குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேச அரசு, பல வகைகளிலும் வழிசெய்துள்ளது. எடுத்துக்காட்டாக, சுவாங் கிங்கை பின்னும் கைவினையை வளரச் செய்ய, சிறப்பு நிதி வழங்கியுள்ளது. புதிய உற்பத்திப் பொருட்களை ஆய்வு செய்ய, தொழில் முறை வல்லுநர்களை உட்புகுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஆண்டுதோறும், குவாங் சியில் நடைபெறும் சர்வதேச நாட்டுப்புறப் பாடல் விழாவிலும், ஆசியான் அருங்காட்சியகத்திலும் உள்நாட்டு வெளிநாட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்படும் மதிப்புள்ள அன்பளிப்புப் பொருளாக இது மாறியுள்ளது. இப்போது சுவாங் கிங் பின்னல் பணியாளர்கள் அதிகமாகியுள்ளனர். எனவே, இது பேணிக்காக்கப்பட்டுள்ளது.

1  2  3