• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-26 17:15:49    
சீனாவில், சிறுபான்மை தேசிய இன தொல் பொருள் பாதுகாப்பு

cri

குய்சோவில் உள்ள உயிரின வாழ்க்கை அருங்காட்சியகம்

அருங்காட்சியகத்தை அமைப்பதன் மூலம் பல்வேறு தேசிய இனங்களின் பண்பாட்டு நினைவை நிலைநிறுத்துவது தவிர, சீனாவில், சில சிறுபான்மை தேசிய இனங்களின் பண்பாட்டு மரபுச் செல்வங்களை அவ்விடத்திலேயே பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்புடைய நிபுணர்கள், இத்தகைய பாதுகாப்பு முறையை, "உயிரின வாழ்க்கை அருங்காட்சியகம்" என கூறுகின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு முன், சீனாவின் முதலாவது "உயிரின வாழ்க்கை அருங்காட்சியகம்" குய்சோவில் நிறுவப்பட்டது. 120 சதுர கிலோமீட்டர் பரப்புடைய இந்த அருங்காட்சியகத்தில் 12 தேசிய இனத்து கிராமங்கள் அடங்கும். ஆண் உழவு-பெண் நெசவு என்ற இயற்கை பொருளாதார நிலை, தனித்தன்மை வாய்ந்த திருமணம், இறுதிச்சடங்கு, அஞ்சலி வைபவம், இசை நடனம் முதலிய பாரம்பரிய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், இக்கிராமங்களில் தொடர்கின்றன. அதன் தலைவர் மு வேய் து பேசுகையில், கிராமவாசிகளின் வாழ்க்கைப் பொருட்கள் உற்பத்தி சாதனங்கள் மற்றும் உடைகள் அலங்காரங்கள் எல்லாம் காட்சியகமாகத் திகழ்கின்றன என்றார்.

"ஆசியாவின் முதலாவது உயிரின வாழ்க்கை அருங்காட்சியகமான இந்த அருங்காட்சியகத்தில் முக்கியமாக, மிங்யோ இனத்தின் ஒரு கிளையான Chang Jiao மிங்யோ வாழ்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் முதல் 2000 மீட்டர் உயரமான மலைத் தொடர்களில் இவ்வினத்தவர்கள் வசிப்பதினால், வெளியுலகுடன் தொடர்பு கொள்வது குறைவு. எனவே, சித்திரத்தையல், இசை நடனம், மத மரியாதை முதலியவை சீர்குலைக்கப்படாமல், பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன" என்றார்.

இது வரை, சீனாவில் 20க்கும் மேலான உயிரின வாழ்க்கை அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. குய் சோ, யுன்னான், குவாங் சி, உள் மங்கோலியா முதலிய பிரதேசங்களில் சிதறி கிடக்கின்றன. மிங்யோ, யோங், மங்கோலிய இனங்களின் பண்பாடுகளை அவை பராமரிக்கின்றன.

சிறுபான்மை தேசிய இனங்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் மேலும் சீராகப் பாதுகாக்கும் வகையில், அண்மையில், சீனாவின் தொடர்புடைய வாரியங்கள், தேசிய இன அருங்காட்சியகக் கமிட்டியை நிறுவின. இது அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட சிவில் நிறுவனமாகும்.

"பல்வேறு தேசிய இனங்களின் தலைசிறந்த பண்பாட்டு மரபுச் செல்வங்களை காப்பாற்றி, பாதுகாத்து, ஆராய்ந்து, காட்சிக்கு வைப்பது, எங்கள் இக்கமிட்டியின் நோக்கம்" என்று, அதன் துணை தலைமை செயலாளர் கூறினார்.


1  2  3