• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-26 17:15:49    
சீனாவில், சிறுபான்மை தேசிய இன தொல் பொருள் பாதுகாப்பு

cri

பெய்சிங்கில் உள்ள தேசிய இனப் பண்பாட்டு அரங்காட்சியகம்

2004ம் ஆண்டிலேயே குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் தேசிய இன அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. உள்ளூர் சிறுபான்மை தேசிய இனங்களின் தொல்பொருட்கள் இவ்வகத்தில் சீராக சேமிக்கப்பட்டுள்ளன. ஓராண்டில் மட்டும் சுமார் பத்தாயிரம் தொல்பொருட்கள் இங்கு திரட்டப்பட்டுள்ளன. குவாங் சி சுவாங் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் தூண்டுதலில், இப்போது சீனாவின் இதர பல பிரதேசங்களில், குறிப்பாக, சிறுபான்மை தேசிய இனங்கள் குழுமிவாழும் பிரதேசங்களில் தேசிய இன அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அரசு நிலை சிறுபான்மை தேசிய இன அருங்காட்சியகமான தேசிய இனப் பண்பாட்டு அரங்காட்சியகம் பெய்சிங்கிலேயே உள்ளது. கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளின் இறுதியில் நிறுவப்பட்ட பின், பல்வேறு தேசிய இனங்களின் சுமார் 50 ஆயிரம் தொல்பொருட்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. அண்மையில், இங்கு நடைபெற்ற, தலைசிறந்த தொல்பொருட்கள் காட்சி, அதிகமான ரசிகர்களை ஈர்த்தது. பார்வையிட இங்கு வருகை தந்த ஜாங் சியேள குங், திபெத் வழி புத்தர் சிலைக்கு முன்னால் எமது செய்தியாளரிடம் பேசுகையில், செயலும் மொழியும், பண்பாடு கையேற்றப்படும் ஒரு வகை பயனுள்ள வடிவம். ஆனால், தொல்பொருள் என்பது, பண்பாட்டு நினைவில் மிகவும் நம்பகமான, மிகவும் நிலையான ஒரு வழிமுறையாகும் என்றார்.

"இப்புத்தர் சிலையை உதாரணமாக கூறுகின்றோம். அக்காலத்திலான ஒரு வகை பண்பாட்டு நம்பிக்கையை மட்டுமல்ல, அழகு மதிப்பீட்டு பாணியையும் அது பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அன்றி, திபெத்துக்கும் மேற்கு பகுதிக்குமிடையிலான பண்பாட்டு உறவு, சீனாவில் புத்தமத வளர்ச்சி முதலியவை, இப்புத்தர் சிலையில் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, அதற்குள் தகவல் உண்டு" என்றார்.

சீனாவின் பல சிறுபாண்மை தேசிய இனங்களின் பண்பாட்டை, இத்தகைய பயனுள்ள மரபுச்செல்வங்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளதாக அவர் சொன்னார். தொல்பொருள் என்பது, ஒரு தேசிய இனத்தின் நினைவாகும். வேறுபட்ட தேசிய இனங்களின் பண்பாட்டு நினைவுகளை பேணிக்காக்கும் அருங்காட்சியகம் அரசுக்கு இருக்க வேண்டும் என்று ஜாங் சியேள குங் கூறினார்.

1  2  3