• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-24 12:17:34    
சீனர்களின் திருமண விழா

cri

கடந்த சில ஆண்டுகளில் சீன சமூகத்தின் விரைவான வளர்ச்சியுடன், சீனர்கள் திருமண விழாவைக் கொண்டாடும் வகைகளும் அதிகரித்து வருகின்றன். குணாம்சத்தை வெளிப்படுத்த, இளைஞர்கள் பலர் தனிச்சிறப்புமிக்க திருமணக் கொண்டாட்டத்தை வடிவமைக்கின்றனர். தனது நினைவிலும், வாழ்க்கை துணைவர் மற்றும் விருந்தினர்களின் நினைவிலும் திருமணக் கொண்டாட்டம் ஆழ்ந்து பதிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

அண்மையில் எமது செய்தியாளரின் நண்பர் ஒருவர் பெய்ஜிங் மாநகரின் மேற்கு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் திருமண விழா நடத்தினார். முதலில் இந்த புதிய தம்பதி கடலோரத்தில் உலாச் சென்ற ஒளிநாடா திரையிடப்பட்டது. இனிமையான காட்சிகளுடனும் கடல் அலையின் ஒலியுடனும், விருந்தினர்கள் இந்த தம்பதியின் காதலை அறியலாம். பின்னர் ஹோட்டலின் பெரிய அறையில் மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டு, இந்த ஜோடி புதிய வாழ்வில் மிக புனிதமான நேரத்தை கழித்து விட்டனர்.

இந்த திருமண விழா செய்தியாளரின் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. சீன திருமணக் கொண்டாட்ட சங்கத்தின் தலைமை இயக்குநர் Shi Kang Ning செய்தியாளரிடம் கூறியதாவது—

"தற்போது, திருமண விழா நடத்துவதில் எழுச்சி ரீதியான அம்சத்தில் மக்கள் நாளுக்கு நாள் கவனம் செலுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, திருமண விழாவின் பாணிக்கும் வடிவத்துக்கும் மக்கள் பலர் முக்கியத்துவம் தரத் துவங்குகின்றனர்" என்றார் அவர்.

தற்போது திருமண விழாவைக் கொண்டாடும் முறை மிக அதிகம். வானத்தில் திருமணம், கடலுக்கு அடியில் திருமணம், புல்வெளியில் திருமணம், இணைய தளத்தில் திருமணம் முதலியவை இடம்பெறுகின்றன. அண்மையில் சீனாவின் சான் துங் மாநிலத்தின் சிங் தௌ நகரில், ஒரு ஜோடி கடலுக்கு அடியில் திருமண விழா நடத்தியது.

1  2  3