• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-24 12:17:34    
சீனர்களின் திருமண விழா

cri

இந்த திருமண விழா, கடலின் அருகில் கட்டப்பட்ட சிங் தௌ கடல் பூங்காவில் நடத்தப்பட்டது. திருமண விழா தவங்கியதும், மண மகன் மற்றும் மண மகள் நீர் மூழ்கி ஆடையை அணிந்து, நீருக்கு அடியில் மூழ்கினர். முதலில் அவர்கள் கை கோர்த்தனர். பின்னர், அரவணைத்து, ஒருவருக்கு ஒருவர் தலை வணங்கினர். 16 நிமிடத்துக்குள் நிறைவுற்ற இந்த திருமண விழா, நேரம் குறைவாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருந்தது. கடலுக்கு அடியில் திருமணத்துக்கு நீர் மூழ்கி தொழில் நுட்பம் தேவை. தற்போது சிங் தௌ நகரில் இத்தகைய திருமண விழா நடத்தும் இளைஞர்கள் குறைவு. சிறு வயதிலிருந்து கடலோரத்தில் வளர்ந்த மண மகள் Lin Teng மற்றும் மண மகன் Wu Wei அதிர்ஷ்டசாலிகளாக மாறிவிட்டனர்.

கடலுக்கு அடியில் திருமண விழாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இணைய தளத்தில் திருமண விழாவின் கஷ்டங்கள் பெருமளவில் குறைந்துள்ளன. சீனாவின் தென் பகுதியிலுள்ள சில நகரங்களில், இணைய தளத்தில் திருமண விழா, white collar பணியாளர்களிடையில் பரவலாகி வருகிறது. இத்தகைய திருமண விழாவுக்கு விருந்தளிக்க வேண்டாம். இணையத்தில் திருமண விழா பற்றிய ஒரு பக்கத்தை நிறுவ வேண்டும். திருமண படங்களையும் காதல் பற்றிய நினைவை நிழலாடும் படங்களையும் பார்த்து, புதிய தம்பதியின் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் உணரலாம்.

தகவல் தொழில் நுட்ப தொழிலில் ஈடுபடும் திரு Wang Chen சில ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் தனது பக்கத்தை நிறுவினார். சில நாட்களுக்கு முன் அவர் தனது காதலியுடன் கலந்து ஆலோசித்த பின், இணைய தளத்தில் திருமண விழாவை நடத்தினார்.

"நானும் எனது மனைவியும் வெளியூரிலிருந்து குவாங் சோவுக்கு வந்து தொழில் செய்ததால், எங்கள் உற்றார் உறவினர்களிலும் நண்பர்களிலும் பெரும்பாலோர் குவாங் சோ நகரில் இல்லை. உற்றால் உறவினர் மற்றும் நண்பர்களின் நேரத்தையும் அவர்கள் வாழும் இடங்களையும் கருத்தில் கொண்டு, அவர்களை குவாங் சோவுக்கு அழைப்பது கடினம். திருமண விழா பற்றிய இணைய பக்கத்தினால், நாங்கள் இருவரும் திருமணம் செய்த இனிமையான தருணத்தை கூடுதலான உற்றார் உறவினர்களும் நண்பர்களும் உணரலாம்" என்றார் அவர்.

திரு Wang Chen வரைந்த திருமண பக்கம், அவரது இணைய பக்கத்துடன் இணைந்தது. பக்கத்தின் பாணி தம்பதி இருவரின் விருப்பப்படி வரையப்பட்டது. திருமண படங்கள், தேனிலவு பயணம், எங்கள் கதை முதலியவை அவர்களின் பக்கத்தில் அடங்கும். இவற்றின் மூலம் அவர்கள் தமது காதல் வளர்ச்சி போக்கை உற்றார் உறவினர்களும் நண்பர்களும் அறிந்து கொள்ளலாம். திருமண பக்கத்தை நிறுவுவதற்கு 300 முதல் 500 யுவான் வரை மட்டுமே செலவிட்டு, வலைமனைப் பெயர் ஒன்றை விண்ணப்பம் செய்தால் போதும் என்று திரு Wang Chen எடுத்துக் கூறினார்.

1  2  3