
தற்போது சீன மொழியிலான இணைய தளங்கள் பலவற்றில் பல திருமண பக்கங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலும் இளஞ்சிவப்பு, ஊதா முதலிய இனிமையான நிறத்தில் வரையப்பட்டு, ரோஜா மலர், lily மலர், இதயம் மற்றும் நட்சத்திர வடிவிலான படங்கள் முதலியவற்றின் மூலம் அழகுப்படுத்தப்படுகின்றன.
ஆனால், இணைய தளத்தில் திருமண விழா என்பது அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கருதப்படுகிறது. இதனால், இணைய தளத்தில் திருமண விழா, விருந்துடன் இணையும் முறையை சிலர் மேற்கொள்கின்றனர்.
புதிய வகை திருமண விழாவின் பரவலுடன், திருமண கொண்டாட்ட நிறுவனங்களின் அலுவல்களும் பல்வகையாகி வருகின்றன. திருமண கொண்டாட்ட முறை பற்றிய சேவையை இந்த நிறுவனங்கள் வழங்குவது மட்டுமல்ல, வாடிக்கையாளரின் கோரிக்கையின் படி, அவர்களுக்கு திருமண விழாவையும் ஏற்பாடு செய்கின்றன. பல நகரங்களில் இந்த நிறுவனங்களின் வியாபாரம் விறுவிறுப்பாக உள்ளது.
தனிச்சிறப்புமிக்க திருமண விழாவின் பரவல், திருமண தரத்தில் சீனர்கள் மேலும் கவனம் செலுத்துவதை காட்டுகிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போது பொருளாதார நிலை நன்றாக உள்ளது. தனிச்சிறப்பு கொண்ட திருமண விழா, இருவரின் திருமண வாழ்க்கைக்கு ஒளிமயமான புதிய துவக்கத்தை உருவாக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். சீன சமூகத்தின் முன்னேற்றத்தை இது பிரதிபலிக்கிறது. சீன சமூக அறிவியல் கழகத்தின் பேராசிரியர் Wang Zhen Yu அம்மையார், பல ஆண்டுகளாக, சீன திருமண நிலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் கூறியதாவது—
"திருமண விழாவின் பல்வகை மயமாக்கம், இந்த யுகம் பாரம்பரியத்திலிருந்து நவீனத்துக்கு மாறுவதை காட்டுகிறது. அதாவது, ஒரு துறையிலிருந்து பல துறைகளுக்கு மாறுகிறது. ஏனென்றால், திருமண விழா கோலாகலமான, தனிச்சிறப்பு கொண்ட நிகழ்ச்சியாகும். இந்த மாற்றத்தை இது பெரிதும் காட்டுகிறது" என்றார் அவர். 1 2 3
|