• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-31 09:48:49    
சீன மொழி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் Richard Doran

cri

சீன வானொலி நிலையத்தின் "அன்னியரின் கருத்து" என்னும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான Richard Doran அயர்லாந்தைச் சேர்ந்தவர். சீன மொழியை சரளமாக பேசுகிறார். சில ஆண்டுகளுக்கு முன், சீன மொழி எழுத்துக்கள் எதுவும் அவருக்கு தெரியாது என்பதை கற்பனை செய்ய இயலுமா?

ஒரு வாய்ப்பினால், சீனாவுக்கு வந்து, இங்கு தமது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் அடைந்துள்ளது என்று Richard Doran கூறினார்.

8 ஆண்டுகளுக்கு முன், அவர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். விடுமுறை கழிக்க அவர், நண்பர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். சிட்னியில் உள்ள சர்வதேச குடியிருப்பில் அன்புள்ளம் கொண்ட சீனர் ஒருவர் அவருடன் பழகி நண்பராகிவிட்டார். இந்த சீனரின் அறிமுகம் மூலம், Richard Doran, தனது பிரிட்டன் நண்பர்கள் இருவருடன் இணைந்து, வட கிழக்கு சீனாவின் லியாவ் நிங் மாநிலத்தின் லியோ யாங் நகரில் உள்ள இடைநிலை பள்ளி ஒன்றில் ஆங்கில மொழி ஆசிரியராக வேலை பார்க்கிறார்.

லியோ யாங் நகரில் ஆங்கில மொழி ஆசிரியராகி பணி புரிந்த நாட்கள், Richard Doranஐ பொறுத்த வரை, சிறந்த நினைவாக உள்ளது. பள்ளியில் அவரின் சீன சக பணியாளர்களும், அவரின் மாணவர்களும் அவரை மிகவும் விரும்புகின்றனர்.

இங்கு, Li Ying என்னும் மங்கையை அவர் காதலித்தார். Li Ying அவருடன் இதே பள்ளியில் ஆங்கில மொழி பாடம் கற்பித்தார். காலம் தெரியாமல் கழிந்தது. துவக்கத்தில் சீனாவில் ஒரு திங்கள் மட்டும் தங்க அவர் திட்டமிட்டார். ஆனால், சுமார் ஒரு ஆண்டாக அவர் தங்கியிருந்தார். பாடம் கற்பிக்கும் கால வரம்பு முடிந்த பின், அவர் அயர்லாந்து திரும்பினார். ஆனால், அவரின் உள்ளம், சீனாவினாலும், இந்த அழகான சீன மங்கையினாலும் இடம்பிடிக்கப்பட்டுள்ளது. அமைதியாக யோசித்த பின், Richard Doran மீண்டும் சீனா திரும்ப தீர்மானித்துள்ளார். பெய்ஜிங் மொழி பல்கலைக்கழகத்தில் சேர அவர் பதிவு செய்தார். இங்கு மூன்றரை ஆண்டுகளாக சீன மொழியை அவர் கற்றுக்கொண்டார்.

1  2  3