• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Monday    may 5th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-31 09:48:49    
சீன மொழி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் Richard Doran

cri

"இந்த இரண்டு நிகழ்ச்சிகள் ஆர்வமூட்டு பவையாக உள்ளன. ஏனெனில், சாதாரண சீனர்களை, குறிப்பாக, மாநகர்களில் வாழ்கின்ற சீன பொது மக்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பு அவை எனக்கு வழங்கியுள்ளன" என்றார் அவர்.

சீன வானொலி நிலையத்தின் "அன்னியரின் கருத்து" என்னும் நிகழ்ச்சிக்கு, பிரான்சு நாட்டவர் Julian, சீனாவின் Tian Jin மாநகரிலிருந்து வந்த Li Xin ஆகியோருடன் அவர் ஒத்துழைத்து நிரந்தரமாக பொறுப்பேற்கின்றார். சீனச் சமூகத்தில் கவனம் ஈர்க்கும் விடயங்கள் பற்றி அவர்கள் சீன மொழியில் கருத்துக்களை பரிமாறி கொள்கின்றனர். கீழை மற்றும் மேலை நாடுகளின் வேறுபட்ட கோணங்களிலிருந்து விவாதிக்கின்றனர்.

தமது பின்னணி, Richard Doran, Julian ஆகியோரின் பின்னணியுடன் வேறுபட்டதால், தமது கருத்து வேறுபட்டது என்று Li Xin தெரிவித்தார். நிகழ்ச்சியில், அவர்கள் அடிக்கடி வாதிட்டனர். சில சமயங்களில், வாதம் தீவிரமானது. ஆனால், பணியில் அவர்களின் ஒத்துழைப்பை இது பாதிக்கவில்லை. மூவர் மகிழ்ச்சியுடன் பழகுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், இடைநிலை பள்ளியில் ஆங்கில மொழி சொல்லி கொடுத்த அந்த அழகான ஆசிரியர் Li Ying, இப்போது Richard Doranனின் மனைவியாக மாறியுள்ளார். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. ஓய்வு நேரத்தில், வீட்டில் நூல்களைப் படிப்பது தவிர, மகனுடன் விளையாடுவது, Richard Doranனின் மிக பெரிய ஆர்வமாகும்.

நாள்தோறும் காலை 6 மணியளவில், பேருந்து அல்லது சுரங்க ரயில் வண்டியில் வானொலி நிலையத்துக்கு அவர் செல்கிறார். அவர் அடிக்கடி தொலைக்காட்சி நிலையத்துக்கு சென்று, பேட்டி அளிக்கின்றார். நாள்தோறும் அவர் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.

தாம் அன்னியர் என அழைக்கப்படுவதை Richard Doran விரும்பவில்லை. சீனர்கள் ஆங்கில மொழியில் தனக்கு வணக்கம் கூறுவதையும் அவர் விரும்பவில்லை. தமது மனைவி சமைத்த சீன உணவை உட்கொள்ள அவர் விரும்புகின்றார். உணவகங்களில் மேலை நாட்டு உணவுகளை அவர் உட்கொள்வது குறைவு. சீனர்களின் பழக்க வழக்கங்களை தாமும் பழகிக்கொள்ள அவர் விரும்புகிறார். உண்மையான பெய்ஜிங் மாநகரவாசிகள் போல் வாழ தாம் விரும்புவதாக Richard Doran கூறியுள்ளார்.


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040