• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-31 09:48:49    
சீன மொழி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் Richard Doran

cri

சீன மொழி, மிக கடினமான மொழி என பொதுவாக கருதப்படுகின்றது. கெட்டிகாரரான Richard Doran சீன மொழியை விரைவாக கிரகித்துக்கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரங்கேற்றம் நிகழ்ச்சியில், ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மாணவர் ஒருவருடன் இணைந்து, சீனாவின் விவாத மேடையை அவர் அரங்கேற்றினார். பின்னர், பெய்ஜிங் தொலைக்காட்சி நிலையம் ஆண்டுதோறும் நடத்தும் "அன்னியரின் கலை போட்டியில்", Richard Doran, தமது கூட்டாளியுடன் இணைந்து முதலிடம் வகித்தார்.

Richard Doranனின் விவாத மேடைத் திறன் மீது, சீனாவின் புகழ் பெற்ற விவாத மேடை கலைஞர் Ding Guang Quan கவனம் செலுத்தி, அவரை தமது மாணவராகச் சேர்த்தார். இந்த அன்னிய மாணவரை Ding Guang Quan மிகவும் விரும்புகின்றார். Richard Doran பற்றி குறிப்பிட்ட போது, Ding Guang Quan எப்போதும் அவரை பாராட்டுகின்றார்.

"நகைச்சுவைத் திறன் அவருக்கு உண்டு. அன்றாட வாழ்க்கையில் அவரின் நகைச்சுவை உணர்ச்சி காணப்பட்டுள்ளது. தவிர, சீனர்களுடன் பழகும் வேளையில், சீனாவின் நகைச்சுவையை உட்புகுத்துவதில் அவர் கவனம் செலுத்துகின்றார். இதற்கிடையில், அயர்லாந்தின் நகைச்சுவையை அவர் வளர்க்கின்றார்" என்றார் Ding Guang Quan.

அரங்கேற்றத்தில் தேர்ச்சி பெற்ற Richard Doran, சீன வானொலி நிலையத்தின் சீன மொழி நிகழ்ச்சியிலும் பெய்ஜிங் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணி புரிகின்றார். தொகுப்பாளராக பணி புரிவது, தம் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிக்கின்றது என்றும், இதனால், இப்பணியை தாம் தெரிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

1  2  3